சமந்தாவின் ‘ஷாகுந்தலம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது… எப்போது தெரியுமா ?

சமந்தாவின் 'ஷாகுந்தலம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது... எப்போது தெரியுமா ?,motion poster shaakuntalam, samantha shaakuntalam, samantha shakuntalam, samantha shakuntalam movie release date, Shaakuntalam, shaakuntalam motion poster, shaakuntalam movie, Shaakuntalam Movie Release Update, shaakuntalam movie songs, shaakuntalam new movie, shaakuntalam on nov4, shaakuntalam opening glimpse, shakuntalam motion poster, shakuntalam movie, shakuntalam movie trailer, Thamizhpadam, Kollywood Latest, Tamil Film News 2022, Kollywood Movie Updates, Latest Tamil Movies News,

உலகப்புகழ் பெற்ற காளிதாசின் ‘அபிஞான ஷாகுந்தலம்’ எனும் சமஸ்கிருத நாடகத்தினை தழுவி எடுக்கப்படும் திரைப்படமே ‘ஷாகுந்தலம்’. இந்தத் திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் கதை, உலகப் புகழ்பெற்ற புராதன காவியமான மகாபாரதத்தில் உள்ள ஷகுந்தலை மற்றும் ராஜா துஷ்யந்தன் அவர்களின் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை சமந்தா ‘ஷகுந்தலையாகவும்’, தேவ் மோகன், ‘ராஜா துஷ்யந்தனாகவும்’ நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான அந்தத் திரைப்படத்தின் முதல் அட்டவணை, ரசிகர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து உள்ளது.
இயக்குனர் குணசேகர், ராஜா துஷ்யந்தனின் ‘புரு’ வம்சத்தை, மிக அழகாக மற்றும் பிரம்மாண்டமாக காட்சியமைக்க, காஷ்மீரில் உள்ள கஷ்யப்பா கணுமாலுவில் படப்பிடிப்பை மேற்கொண்டார்.

அழகிய கதைக்களம் என்பதனை தாண்டி, இந்த படத்தில் திறமைமிகு நட்சத்திர பட்டாளத்தை காணலாம். சச்சின் கேடேகர், கபீர் பேதி, டாக்டர் எம். மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், மதுபாலா, கௌதமி, அதிதீ பாலன், அனன்யா நாகலா மற்றும் ஜிஷு சென்குப்தா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் கூடுதல் ஈர்ப்பாக, நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் ‘அல்லு அர்ஹா’ இளவரசர் ‘பரதர்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் , தில் ராஜு அவர்கள், குணா டீம்வொர்க்ஸுடன் இணைந்து வழங்க, நீலிமா குணா தயாரிக்க, குணசேகரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நவம்பர் 4 2022-ல் வெளிவரவுள்ளது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here