ஜீவன் – நட்டி இணைந்து கலக்கும் புதிய படம் ‘

“யாயா” படத்தை தொடர்ந்து நல்ல விமர்சனங்களை கொடுத்த படம் “பக்ரீத்”.
இப் படத்தை
“M10 PRODUCTIONS” சார்பில்
தயாரித்த M.S.முருகராஜ் தயாரிக்கும் மூன்றாவது பிரமாண்ட படத்திற்கு “சிக்னேச்சர்” என்று பெயரிட்டுள்ளார்.

நாம் வைக்கிற ஒவ்வொரு கை நாட்டும் எவ்வளவு முக்கியமானது. அந்த கை நாட்டை பயன்படுத்தி, அவங்க தலையெழுத்துல தாளம் போடுறது தான் இந்த “சிக்னேச்சர்”.

சாமானிய மக்களோடு பழகி அவங்க ரகசிய டேட்டா வை திருடும் கேரக்டரில் “திருட்டுப்பயலே” ஜீவன் நடிக்கிறார்.

அதே டேட்டா வை பயன்படுத்தி மக்களை வேட்டையாடு பவராக, “சதுரங்கவேட்டை” நட்டி நடிக்கிறார்.

இவர்கள் இணைந்து செய்யும் ‘சீட்டிங்’ தான் படத்தின் திரைக்கதை சுவாரசியம்.

இவர்களுடன் இளவரசு, ஹரிஷ் பெராடி,
மன்சூர் அலிகான், ஜார்ஜ், மாறன் மற்றும் பலர் நடிக்கின்றனர். கதா நாயகி தேர்வு நடை பெற்று வருகிறது.

இதில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார்.

இத்திரைப்படத்தை “பக்ரீத்” படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்குகிறார்.

ஒளிப்பதிவு- சீனிவாசன் தயாநிதி,
சண்டைப்பயிற்சி- திலீப் சுப்பராயன்,
நடனம்- கல்யாண், தினேஷ்,
படத்தொகுப்பு- கலை,
திரைக்கதை- பொன் பார்த்திபன்,
கலை இயக்குநர்- மைக்கேல்,
ஆகியோர் பணிபுரிகிறார்கள்.

விநாயகர் சதுர்த்தி இன்று பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பமானது. முதல் நாள் படபிடிப்பில் நாயகர்கள் ஜீவன், நட்டி கலந்து கொண்டார்கள்.
தொடர்ந்து ஒரே கட்ட படபிடிப்பாக சென்னை, மும்பை மற்றும் துபாய் போன்ற பல இடங்களில் நடைபெறுகிறது. பூஜையில் டைரக்டர் ஹரி, நடிகர் ஹரிஷ் பேரடி கலந்து கொண்டார்கள்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here