சிங்கப்பெண்ணே தமிழ் திரைப்பட விமர்சனம்

சிங்கப்பெண்ணே கதை

தென்காசியில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் அப்பா அம்மாவை இழந்து, பாட்டியின்உறவில் வாழும் ஒரு அழகான சின்ன பெண் தேன். அவளது தாய் மாமன் குடிகாரன், (சென்ராயன் )தினமும் குடித்துவிட்டு வந்து தேன் எனக்குத்தான், அவளை நான்தான் திருமணம் செய்து கொள்வேன், என்று அடம் பிடிக்கிறார்

Read Also: Arimapatti Sakthivel Tamil Movie Review

தேன் கிணற்றில் நன்றாக நீச்சல் அடிக்கிறார் ,சைக்கிள் நன்றாக ஓடுகிறார், ஓட்டப்பந்தயத்தில் நன்றாக ஓடுகிறார், இதையெல்லாம் சென்னையில் இருந்து தென்காசிக்கு வந்த சில்பா மஞ்சுநாத் கண்டு பிடிக்கிறார். ஒரு கட்டத்தில் தேன் பாட்டி இறந்து விட, தேனை சென்னைக்கு கூட்டி வருகிறார், தேனுக்கு போட்டியில் கலந்துகொள்ள பயிற்சியும் கொடுக்கிறார்.

தேன் உடன் போட்டியில் கலந்துகொள்ளும் மற்றொரு பெண்ணின் பெற்றோர், தேன் இருக்கும் வரை நமது மகள் ஸ்டேட் பர்ஸ்ட் வர முடியாது. தேனை போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்று சில்பா மஞ்சுநாத்திடம் தூது அனுப்புகிறார் பிரேம், சில்பா மஞ்சுநாத் அதற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறார் இதனால் தேன் இந்த போட்டியில் கலந்து கொள்ளாமல் இருக்க சதிசெய்து பெங்களூர் அனுப்புகிறார். பெங்களூர் சென்று போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் செய்து தேனை போட்டியில் தோற்கடிக்க வைக்கிறார். அதற்குப் பிறகு தேன் நீச்சல், சைக்கிள், மற்றும் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு ஜெயித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் JSB சதிஷ் தயாரித்து இயக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *