அரிமாபட்டி சக்திவேல் தமிழ் திரைப்பட விமர்சனம்

அரிமாபட்டி சக்திவேல் கதை

சென்னையில் உதவி இயக்குனராக இருக்கும் சக்திவேல், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த காதலை நினைத்துப் பார்க்கிறார். சக்திவேல் கவிதா என்ற பெண்ணை எட்டு வருடமாக காதலிக்கிறார் கவிதா வீட்டில் இந்த காதல் விஷயம் தெரிய வர கவிதாவுக்கு , மாப்பிள்ளை பார்க்கிறார்கள் இதனால் சக்திவேலும் கவிதாவும் ஊரை விட்டு ஓடி , திருமணம் செய்து கொள்கிறார்கள்.

Read Also: Guardian Tamil Movie Review

இந்த விஷயம் கவிதாவின் அண்ணனுக்கு தெரிய வர, அவர்கள் இருவரையும் தேடிக் கொண்டு சக்திவேல், வீட்டுக்கு வருகிறார். அங்கு நடக்கும் பிரச்சனை ஊர் பஞ்சாயத்து வரை செல்கிறது. அந்த ஊருக்குள் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது, காதலிக்கும் எந்த ஆணும் ,பெண்ணும் தங்கள் ஊருக்குள் வரக்கூடாது, அப்படி காதலித்து வந்தால் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்பதுதான் அந்த கட்டுப்பாடு, சக்திவேல் இதை மீறியதால் அவர் வாழ்க்கையில் என்னென்ன நடந்தது? என்பதும் சக்திவேல் சினிமாவில் சாதித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் ரமேஷ் கந்தசாமி இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡சார்லியின் சிறப்பான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡பின்னணி இசை
➡ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

➡ஊருடன் நம்மை ஒட்ட வைக்காத கட்டுப்பாடு
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

Rating: ( 2.5/5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *