வந்தியத்தேவனையும் , அருண்மொழி வர்மனையும் அழைத்த ஆதித்த கரிகாலன் எங்கு தெரியுமா?
சுபாஸ்கரன் லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும், மணி ரத்னம் இயக்கியுள்ள “பொன்னியின் செல்வன்” படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. படத்தின் வேலைகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில், இன்னொரு புறம் படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் நடிகர் நடிகைகள் இறங்கியுள்ளனர். ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், வந்திய தேவனாக நடித்திருக்கும் கார்த்தி, குந்தவையாக வரும் த்ரிஷா ஆகியோர் பொன்னியின் செல்வன் படத்தை சமூக வலைதளங்கள் மூலமும் தீவிரமாக பிரபலப்படுத்துகின்றனர்….