தங்கலான் படத்தில் பழங்குடிப்பெண்ணாக கலக்கும் மாளவிகா மோகனன்

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். கவர்ச்சியான அவதாரங்களில் நடித்தாலும், உடனே அழுத்தமான பாத்திரத்திற்கு மாறும் அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது. பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் தன் திறமையை நிரூபிக்க, அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். சீயான் விக்ரமுடன் அவர் நடித்துள்ள…

Read More

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘தங்கலான்’. இதில் சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜுன் பிரபாகரன் மற்றும் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் குமார்…

Read More

Netflix பண்டிகை: Netflix-ன் 2023 தமிழ் திரைப்பட அறிவிப்புகள்

Netflix-ல என்ன Special? பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2023-ம் ஆண்டில் தன்னிடம் உரிமம் உள்ள படங்கள் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்த பின்னர் ரசிகர்கள் இதனை தங்கள் இல்லத்திரைகளில் நெட்ஃபிலிக்ஸ் வாயிலாக பார்த்து ரசிக்கலாம். தங்களுடைய லைன்-அப் படங்கள் குறித்து நெட்ஃபிலிக்ஸின் கண்டெண்ட் VP மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “எங்களுடைய பார்வையாளர்கள் உள்ளூர் கதைகளில் இருந்து உலக படங்கள் வரை விரும்பிப் பார்க்கக் கூடியவர்கள் என்பதால்…

Read More

நடிகர் மேத்யூ தாமஸ் – நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கும் ‘கிறிஸ்டி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘பேட்ட’, ‘மாஸ்டர்’ படப் புகழ் நடிகை மாளவிகா மோகனனும், மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் மேத்யூ தாமஸும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிறிஸ்டி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரித்விராஜ், ஜெயசூர்யா, டோவினோ தாமஸ், நிவின் பாலி, சன்னி வெய்ன், உன்னி முகுந்தன், ஜாய் மாத்யூ, நடிகை மஞ்சு வாரியர், பஷில் ஜோசப், அந்தோணி பேப் ஆகியோர் தங்களது அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்….

Read More

சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘தங்கலான்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. முத்திரை பதித்த முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகன் நடிகர்கள் பசுபதி, ஹரி கிருஷ்ணன் அன்பு துரை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்யும்…

Read More