விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

திரையுலகின் முன்னணி நட்சத்திரக் கலைஞர்களான விஜய் தேவரகொண்டா –  சமந்தா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குஷி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி,…

Read More

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர், பரசுராம் நடிக்கும் VD13 / SVC 54 படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது!

விஜய் தேவரகொண்டா மற்றும் பரசுராம் இணையும் படம் குறித்தான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ். மேலும், வாசு வர்மா இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக உள்ளார். ’கீத கோவிந்தம்’, ’சர்க்காரு வாரிபட்டா’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் பரசுராம் மீண்டும் இணைந்திருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே அதிகரித்துள்ளது. இவர்கள் இணைந்திருக்கும் இரண்டாவது படம் இன்று ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது….

Read More

விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ குஷி’ படத்தில் இடம்பெற்ற ‘என் ரோஜா நீயா..’ என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘குஷி’ திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடலுக்கு ‘என் ரோஜா நீயா..’ என பெயரிடப்பட்டிருக்கிறது. ‘என் ரோஜா நீயா ..’ எனும் பாடலின் மெட்டிற்கும், பாடல் வரிகளுக்கும் விஜய் மற்றும் சமந்தா திரையில் தோன்றி காதல் உணர்வை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாடலாசிரியர் மதன்…

Read More

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்

தெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘குஷி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர்…

Read More

எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பரசுராம், தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா இணைகிறார்

‘கீத கோவிந்தம்’ படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் பரசுராமுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒருமுறை இணைகிறார். இது குறித்தான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பிளாக் பஸ்டர் வெற்றியான ‘கீத கோவிந்தம்’ படத்திற்கு பிறகு விஜய் மற்றும் பரசுராம் இரண்டாவது முறையாக இணைகின்றனர். இந்த புராஜெக்ட் புதிய மற்றும் தனித்துவமான கதையாக இருக்கும். ஸ்டார் தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இந்த புதிய படத்தைத் தயாரிக்க உள்ளனர். விஜய்யுடன் இணையும் இந்த படம்…

Read More

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, ‘குஷி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ‘குஷி’ திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘குஷி’ திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் பார்வையாளர்களை கவரும் வகையில் தோன்றுகின்றனர்….

Read More