தமிழ்க்குடிமகன் தமிழ் திரைப்பட விமர்சனம்

தமிழ்க்குடிமகன் கதை

கதையின் நாயகன் சின்னசாமி ஊருக்கு ஒதுக்குபுறமாக தனது குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார். சின்னசாமி தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்பதால் எப்படியாவது வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார். ஊரில் யாராவது இறந்துவிட்டால் அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வது தான் சின்னசாமியின் வேலை.

Read Also: Jawan Movie Review

மருத்துவம் படிக்கும் இவரின் தங்கையை மேல்ஜாதிக்காரரான லால் அவர்களின் மகன் காதலிக்கிறார். இதனையறிந்த லால், தனது ஆட்களுடன் சென்று சின்னசாமியின் தங்கையை அடித்து ரோட்டிலேயே விட்டுச்செல்கிறார். இதனை பார்த்த சின்னசாமி இனிமேல் யாருக்கும் இறுதிச்சடங்கு செய்யக்கூடாது என்று முடிவெடுக்கிறார். அதேசமயத்தில் லால் அவர்களின் தந்தை இறந்துபோகிறார். தான் யாருக்கும் இறுதிச்சடங்கு செய்யக்கூடாது என்றிருந்த சின்னசாமியை ஊர் மக்கள் துன்புறுத்துகின்றனர். இவையெல்லாம் தாண்டி, சின்னசாமி மீண்டும் இறுதிச்சடங்கை செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡அனைவரின் நடிப்பு
➡சின்னசாமியாக வாழ்ந்த சேரன்
➡சாம் CS-ன் இசை
➡ஒளிப்பதிவு
➡நீதிமன்றக்காட்சிகள் & ஒருசில வசனங்கள்

படத்தில் கடுப்பானவை

➡மேலும் மெழுகேற்றப்படாத திரைக்கதை
➡படத்தொகுப்பு

Rating: ( 2.75/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *