தளபதி உள்ளமே – கருணை இல்லமே!

கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ” என்ற பாடலுக்கு ஏற்றார் போல் உருக்கமான ஒரு நிகழ்வு விஜய் ரசிகர்களால் அரங்கேறியுள்ளது. 

விஜய் புலி இசை வெளியிட்டு விழாவில் சொல்லியிருப்பார் ” எனக்கும் என் ரசிகர்களுக்கு மத்தவங்கள வாழ வச்சு தான் பழக்கம் ” என்று அவர் வார்த்தையை காப்பாற்றுவது போல்..

 சென்னையை சேர்ந்த தேவிகா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பெண்கள் தூத்துக்குடிக்கு திருமணத்திற்காக சென்றிருந்தனர். காசெல்லாம் செலவான பின்னர் பேருந்து நிலையங்களிலும் கோவில்களிலும் தங்கியிருந்த அவர்கள் ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடினார்கள். 

தூத்துக்குடியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை சந்தித்து தங்களுடைய நிலையை கூறினார்கள். இந்த விஷயம் உடனடியாக விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தளபதி விஜய் தூத்துகுடி மற்றும் திருநெல்வேலியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு போன் செய்து அந்த 11 பெண்களும் பத்திரமாக சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து அவர்கள் முறையாக அனுமதி பெறப்பட்டு, சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here