‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வருகிறது!

நடிகர் அருள்நிதி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும், பாக்ஸ் ஆபிஸில் ஒரு வெற்றி நட்சத்திரமாக தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார். மேலும், தனித்துவமான கதை அம்சம் கொண்ட திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தன் படங்களைத் திரையரங்குகளுக்குப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளார். அவரது முந்தைய படங்களின் வெற்றி இதையே நிரூபிக்கிறது. தற்போது, சை கௌதமராஜ் இயக்கத்தில், ஒலிம்பியா மூவீஸின் அம்பேத் குமார் தயாரிப்பில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமப்புற பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். நடிகர் கார்த்தி, நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள இந்த டீசரில் இருந்து, ஆக்‌ஷன், காதல், குடும்ப உணர்வுகள் என படம் 100% குடும்ப பொழுதுபோக்குடன் இருக்கும் என்பதை தெளிவாக உறுதிப்படுத்துகிறது. இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ளார். சமீபத்தில் ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தை ‘ராட்சசி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற சை கௌதமராஜ் இயக்கியுள்ளார்.

துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார் மற்றும் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதாஸ்வா, ராஜா சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்திருக்க யுகபாரதி பாடல்களை எழுதுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் நாகூரன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ இயக்குநர் ஜேம்ஸ் கன், நடிகரான ஜூனியர் என்டிஆருடன் இணைந்து பணியாற்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்!
அடுத்த கட்டுரை‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி வால்யூம் 3’ தமிழ் நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்?