தமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் !

தமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் !

சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியாவெங்கும் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படம் இப்பொழுது சுட சுட தமிழில் உருவாகிறது. சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான R.கண்ணன் இப்படத்தினை தயாரித்து, இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். பல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் -க்கு ‘காக்காமுட்டை’, ‘கனா’, ‘க/பெ.ரணசிங்கம்’ போன்ற படங்கள் நல்ல பெயரையும் வசூலையும் பெற்று தந்தது. அது போல் இப்படமும் அவருக்கும் ஒரு பெரிய மைல் கல்லாக அமையும். மற்ற நட்சத்திர தேர்வு நடைப் பெற்று வருகிறது.
இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விரைவில் படபிடிப்பு ஆரம்பமாகிறது. தமிழ் – தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் படைப்புகளை தரும் தரமான இயக்குநர் எனும் பெயரை பெற்றிருக்கிறார் இயக்குநர் R.கண்ணன். ‘ஜெயம் கொண்டான்’ வெற்றிப்படத்துடன் அறிமுகமான இவர், அதனை தொடர்ந்து, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பிஸ்கோத்’ என பல வகை ஜானர்களிலும் வித்தியாசமான படங்கள் தந்து தரமான இயக்குநர் வரிசையில் இடம்பிடித்திருக்கிறார். மேலும் இதனை தொடந்து அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்த “தள்ளிப் போகாதே” ரொமான்ஸ் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் , இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து, சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும்பாராட்டுக்களை குவித்த “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படத்தை தமிழில் உருவாக்கம் செய்கிறார்.

சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியான இப்படம் இன்றைய இளையதலைமுறை தம்பதியனரிடம், பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. தற்காலத்திய நாகரீக உலகிலும், பெண்கள் இன்னும் சமையலறையில் தான் முடக்கப்படுகிறார்கள், என்பதை அழுத்தமான வகையில் பதிவு செய்திருந்த இப்படம் பார்வையாளர்கள், விமர்சகர்கள் என அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது.

இயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் Masala Pix நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

தொழில்நுட்ப குழுவினர் விபரம்

தயாரிப்பு & இயக்கம் : R கண்ணன்

ஒளிப்பதிவு : பாலசுப்பிரமணியெம்

வசனம் : சவரிமுத்து & S.ஜீவிதா சுரேஷ்குமார்.

படத்தொகுப்பு : லியோ ஜான் பால்

கலை இயக்கம் : ராஜ்குமார்

உடை வடிவமைப்பு : பிரதீபா பாண்டியன்

புரொடக்சன் எக்ஸிக்யூட்டிவ் : அய்யாபிள்ளை

எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் : ஓம்சரண்

மக்கள் தொடர்பு : ஜான்சன்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here