குக் வித் கோமாளி புகழ் பாபா பாஸ்கர் மாஸ்டர் குடும்பத்தோடு சாமி தரிசனம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி மிகப் பெரிய ஹிட்டாகி உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் குக்’கள் மற்றும் கோமாளிகள் தமிழகம் முழுவதும் பிரபலம் ஆகி விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிகழ்ச்சியின் ‘குக்’களாக அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, பவித்ரா, மதுரைமுத்து, கனி, தர்ஷா, தீபா ஆகியோர்களும் கோமாளிகளாக ஷிவாங்கி, புகழ், சரத், சக்தி, மணிமேகலை, சுனிதா, பாலா உள்ளிட்ட சிலரும் பங்கு கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்’களில் ஒருவராகிய பாபா பாஸ்கர் செய்யும் அட்ராசிட்டிக்கு அளவே இருக்காது. குறிப்பாக ’மாரி’ திரைப்படத்தின் மியூசிக் போட்டவுடன் கையில் யார் கிடைத்தாலும் அவர்களை தூக்கி கொண்டு செல்லும் அவருடைய அட்ராசிட்டியால் நிகழ்ச்சியே களைகட்டி உள்ளது

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பாபா பாஸ்கரின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது. திருப்பதியில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் பாபா பாஸ்கர், அவருடைய மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் உள்ளனர். பாபா பாஸ்கருக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here