தூத்துக்குடி சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ” தெற்கத்தி வீரன்”

சந்திரபாபு ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் சாரத் இயக்கி, நாயகனாக நடித்து, பாடல்கள் எழுதி தயாரித்துள்ள படம் ” தெற்கத்தி வீரன்”

கதாநாயகியாக அனகா நடித்துள்ளார்.மற்றும் முருகா அசோக், நாடோடிகள் பரணி, கபீர் துக்கான் சிங், பவன், வேலா ராம்மூர்த்தி, மது சூதனன் ராவ், மாரி வினோத், குட்டி புலி ராஜ சிம்மன், R.N.R.மனோகர், முல்லை, ரேணுகா, உமா பத்மநாபன், ரித்திகா, ஆரியன், நமோ நாராயணா, லொள்ளு சபா மனோகர், வெங்கல் ராவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதி – N.சண்முக சுந்தரம் ( இவர் விஜய் சேதுபதி நடித்த 96 படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது )
இசை – ஶ்ரீகாந்த் தேவா
எடிட்டிங் – V.J.சாபு ஜோசப்
நடனம் – சாண்டி, பாரதி
ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், கணல் கண்ணன்.
கலை – குருராஜ்
தயாரிப்பு மேற்பார்வை – பெஞ்சமின்
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – சந்திரபாபு ஃபிலிம் பேக்டரி

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, தயாரித்து, நாயகனாக நடித்த, இயக்கியுள்ளர் – சாரத்

படம் பற்றி இயக்குனரும், நடிகருமான சாரத் கூறியதாவது….

தூத்துக்குடியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கமர்ஷியல் கலந்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

சமூகத்தின் மீது அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு இளைஞனும் இந்த படத்தை பார்க்கும் போது , அவர்களையே திரையில் பார்ப்பது போல் இருக்கும். இன்றைய சூழலில் சமூகத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை வைத்து திரைக்கதையை உருவாக்கி உள்ளேன்.

சமூகத்தின் மீது அக்கறை கொண்டு எழுச்சியுறும் இளைஞர்களை அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் ஒடுக்குகிறது என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் படம் தான் இந்த ” தெற்கத்தி வீரன்”

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம் ,என்றார் சாரத்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here