Trance Movie Public Opinion

God’s own country என்று கேரளத்தை ஒரு புறம் கூறினாலும், அங்கு பகுத்தறிவும், நேர்கொண்ட பார்வையும் மக்கள் இடத்தே ஓரளவிற்கு தெளிவாகவே உள்ளது. அதுனால் தான் கம்யூனிசம் சித்தாந்தம் வேரூன்றி நிற்கிறது. மதத்தின்னாலும் மூடநம்பிக்கைகளினாலும் மனிதன் எவ்வாறு பாதிக்கபடுகிறான் என்பதை நிர்வாணமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது #Trance.கண்ணியாகுமரி மாவட்டத்தில், சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்து, மனநலம் பாதிக்கப்பட்ட தன் தம்பி குஞ்சான்னுடன் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும்மென்ற எண்ணத்துடன் ஊக்கமூட்டும் பேச்சாளர்ராக(Motivational speaker), வாழ்ந்து வரும் விஜூ பிரசாத். தன் ஊக்கமூட்டும் பேச்சிற்காக ஒரு லட்சம் விலை நிர்ணயம் பண்ணிய இடத்தில் வெறும் மூனாயிரம் தருவதாக பேரம் பேசும் வாடிக்கையாளர்களை வாடிக்கையாக கொண்டு வாழ்த்து வருகிறார்.பொருளாதார நெருக்கடியில் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்க மனநிலை பாதிக்கபட்ட தன் தம்பி தற்கொலை செய்து கொள்கிறான். அதோடு தமிழகத்தை விட்டு பிழைப்பு தேடி மும்பை செல்கிறார். மும்பையில் டெலிவரி பாய்யாக வேலை செய்து கொண்டிருக்கும் போது கண்ணியாகுமரியில் இவரால் ஆபத்துக்கு உதவிய பெற்ற பெண்ணால் விஜி பிரசாத்திற்கு உதவி கிடைக்கிறது. CUT பண்ணினாள், மிக பெரிய பணக்காரரான கௌதம் மேனனின் முன்னால் வேலை கேட்டு அமர்ந்திருக்கிறார். ‘கௌதமின் மாஸ்டர் பிளான் மூலம் பாஸ்டர்’ ஆகிறார் விஜி பிரசாத். பின் விஜி பிரசாத்தில் இருந்து ஜோஷுவா கார்ல்டன்-னாக உருவெடுக்கிறார். மாறிய நாளில் இருந்து கொச்சியில் வித்தைக்காட்ட செல்கிறார்.

பாஸ்டராக நடிப்பதற்கு ஆறு மாதம் கற்றுகொள்கிறார். கதையில் இயல்பாகவே இவர் ஒரு ஊக்கமூட்டும் பேச்சாளர் என்பதால் பாஸ்டர் உடல் பாவனைகள், பேச்சுகள், பைபிள் வசனங்கள் என அனைத்தயும் கற்று ஊரில் முக்கியமான பாஸ்டர் ஆகிறார். பின் இவர் வாழ்க்கை எப்படி மாறியது? என்ன நடந்து? என்பதை எளிமையாக மிகவும் சுவாரசியமான திரை மொழியுடன் கொடுத்திருக்கிறார் அன்வர் ரஷீத்.

படத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் நடிகன் என்பதை இழக்கிறார் பாகத் பாசில். தன்னை முழுமையாக கதைக்குள் சமர்ப்பித்துவிட்டார். பாஸ்டர்ராக அவதரிக்கும் காட்சியெல்லாம் நடிப்பின் உச்சக்கட்டம். எதார்த்தமான நடிப்பில் பாகத் பாசில் அடிப்பது “சிக்ஸ்சையும்” தாண்டுகிறது. மேலும் படத்தில் நஸ்ரிய நஜிம், கெளதம் மேனன், விநாயகம் போன்றவர்கள் அவர்களுக்கான பணிகளை, அவர்கள் பாணியில் சிறப்பாக செய்திருப்பது படத்திற்கு பலம்.

“ஒவ்வொரு வினையும் ஒரு எதிர் வினையை கொண்டிருக்கும்” என்பார்கள் அதே போல இந்தப்படத்தின் நெகடிவ் என்று பார்த்தால், படத்தின் நீளம். படத்தின் இரண்டாம் பாதி மிக நீளம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு பின் கதையின் அளவை நொறுக்கி, சுருக்கி அணுகியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இரண்டாம் பாதியில் திரை நாடகத்தில் நேர்ந்த தொய்வுகளை இன்னும் சீரமைத்திருந்தால் இன்னும் சிறப்பளித்திருக்கும்.

ஆகமொத்தம் தற்கால சூழலுக்கு தேவையான படம். பக்திமான்கள் கற்றுக்கொள்ளவேண்டிய படம், பகுத்தறிவாளர்கள் பாராட்ட வேண்டிய படம்!! அல்லேலுயாஹ்!! ஆமென் !!

Subscribe to our Youtube Channel for the latest Kollywood updates.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here