“ட்ரிகர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

“ட்ரிகர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!,Arun Pandian, arun pandian about atharvaa, arun pandian latest speech, arun pandiyan about sam anton, Atharva, atharvaa about arun pandian, atharvaa speech trigger press meet, Tanya Ravichandran, thamizhpadam, trigger movie press meet, trigger movie press meet event, trigger movie trailer launch event, trigger press meet, trigger press meet arun pandian speech, trigger press meet atharvaa speech, trigger press meet video, Trigger Tamil Movie Press Meet, trigger tamil press meet, Thamizhpadam, Kollywood Latest, Tamil Film News 2022, Kollywood Movie Updates, Latest Tamil Movies News,

PRAMOD FILMS சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி & சுருதி நல்லப்பா வழங்கும்,
சாம் ஆண்டன் இயக்கத்தில்,
அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைகதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பட வெளியீட்டை ஒட்டி படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இவ்விழாவினில்

நடிகர் அருண் பாண்டியன் கூறியதாவது..,

“ நான் நீண்ட வருடங்களுக்கு பிறகு என் மகளுடன் ஒரு படம் நடித்தேன் அதை இயக்குநர் சாம் ஆண்டன் பார்த்துவிட்டு என்னை பார்க்க வந்தார். நல்ல கதையை தேர்ந்தெடுக்கலாம் என்று நான் யோசித்த போது தான் இந்த கதை வந்தது. இந்த டீமுடன் பணிபுரிந்த அனுபவம் எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படம் கண்டிப்பாக சுவாரஷ்யமான படமாக இருக்கும் சாம் ஆண்டன் மிக அழகாக படத்தை இயக்கியுள்ளார். என் நண்பர் சின்னி ஜெயந்துடன் மீண்டும் நடித்தது மகிழ்ச்சி. அதர்வா மிக திறமையான நடிகர் மிக கடின உழைப்பை தந்துள்ளார் இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும்.
படம் உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்.”

நடிகர் சின்னி ஜெயந்த் கூறியதாவது..,
“இந்த படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை இயக்குனர் வடிவமைத்துள்ளார். ஒரு ஆக்‌ஷன் நிறைந்த ஆங்கில படத்தில் நடித்த அனுபவம் போல் இந்த படம் இருந்தது. அதர்வா உடன் எனக்கு இது முதல் படம். ஆக்சனில் தமிழில் சிலர் மட்டுமே ஜொலிப்பார்கள் விஜயகாந்த் போல் அதர்வாவின் ஆக்‌ஷன் நடிப்பில் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்த படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றியடையும்.”

நடிகர் அதர்வா கூறியதாவது..,
“ ட்ரிகர், நானும் இயக்குனரும் இணையும் இரண்டாவது படம். நல்ல கதைக்கரு உடைய திரைப்படம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஆக்‌ஷனை தாண்டி படம் உணர்வுபூர்வமான பல விஷயங்களை கொண்டுள்ளது. தயாரிப்பாளர் ஷ்ருதி ஒரு தயாரிப்பாளரை தாண்டி கிரியேட்டிவ்வாக படத்தில் பணிபுரிந்தார். சாம் ஆண்டன் பதட்டமில்லாமல், சாதாரணமாக படத்தை கையாள்வார், அவர் நிச்சயமாக பெரிய இடத்திற்கு செல்வார். அருண் பாண்டியன், சின்னி ஜெயந்த் இருவருடைய நடிப்பும் அபாரமாக இருந்தது. சின்னி ஜெயந்த் சாரை அப்பாவுடன் சூட்டிங் செல்லும் போது பார்த்துள்ளேன் இப்போதும் இளமையாக இருக்கிறார். என்னுடன் காலேஜ் படத்தில் நடிப்பார். படம் தொழில்நுட்ப ரீதியாக பலரது உழைப்பால் நன்றாக வந்துள்ளது. ஒரு நல்ல படத்தை உருவாக்கிய சந்தோசம் எங்களுக்கு இருக்கிறது. இந்த படத்தை குடும்பத்தோடு வந்து அனைவரும் பாருங்கள், இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.”

இயக்குனர் சாம் ஆண்டன் கூறியதாவது..,
“என்னுடைய அனைத்து படங்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்களுக்கு நன்றி. எந்த வித பதட்டமும் இல்லாமல் இந்த படத்தை முடித்ததற்கு காரணம் தயாரிப்பாளர் கொடுத்த ஒத்துழைப்பு தான். அவர்களுடைய ஒத்துழைப்பு அபாரமானது. அதர்வாவிடம் இந்த கதையை கூறிய போது, அவர் மீண்டும் போலீஸ் கதை என்று யோசிக்காமல், கதையில் உள்ள வித்தியாசத்தை புரிந்து ஒத்துகொண்டார். அதர்வா உடைய கடின உழைப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். தன்யா அர்பணிப்புடன் மிக நன்றாக நடித்துள்ளார். படத்தின் டிரெய்லருக்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.”

தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா பிரமோத் பிலிம்ஸ் கூறியதாவது..,
“ இது எங்களுடைய மூன்றாவது தமிழ் படம். இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இன்னும் நிறைய தமிழ் படம் எடுக்க எங்களுக்கு விருப்பம் இருக்கிறது. ஆக்சனோடு கலந்த உணர்வுபூர்மான கதையை சாம் கூறினார். கதையை கூறியவுடன் எல்லாம் உடனடியாக அமைந்தது. அதர்வா படத்திற்குள் வந்தது படத்திற்கு பலமாக அமைந்தது. அவர் நல்ல நண்பராக இருந்து படத்தில் நடித்தார். திட்டமிட்டததை விட சீக்கிரம் படத்தை முடித்துவிட்டோம். அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தான் காரணம். எங்கள் கடின உழைப்பை தந்து எடுத்துள்ளோம், படத்திற்கு ஆதரவு தாருங்கள் . “

தயாரிப்பாளர் பிரதிக் சக்ரவர்த்தி, கூறியதாவது..,
“ இந்த கனவு திரைப்படத்தில் இணைந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி. ஆக்‌ஷன் படத்தை இவ்வளவு பெரிய திரைப்படமாக எடுத்தது எங்களுக்கு மகிழ்ச்சி. படத்தை அனைவரும் பாருங்கள் நன்றி. “

ட்ரிகர்” திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். அருண் பாண்டியன், சீதா, கிருஷ்ண குமார், வினோதினி வைத்தியநாதன், முனிஷ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் மற்றும் இன்னும் பல முக்கிய நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். திலீப் சுப்பராயன் ஆக்‌ஷன் கோரியோகிராஃபராக பணியாற்ற, ராஜேஷ் கலை இயக்கம் செய்துள்ளார், தீபாலி நூர் காஸ்ட்யூம் டிசைனராகவும், கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். சுரேஷ் சந்திரா & ரேகா D one (மக்கள் தொடர்பு), Lorven Studios (VFX), ஓமர் (நிர்வாகத் தயாரிப்பாளர்) மற்றும் கோகுல்.K (கிரியேட்டிவ் புரடியூசர்) ஆக பணியாற்றியுள்ளனர்.

இயக்குநர் சாம் ஆண்டன் எழுதி இயக்கும் ‘ட்ரிகர்’ திரைப்படத்தை, PRAMOD FILMS சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி & சுருதி நல்லப்பா தயாரிக்கின்றனர். Romeo Pictures வெளியிடும் இப்படம் செப்டம்பர் 23 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here