கல்லூரி விழாவில் “ட்ரிகர்” திரைப்பட குழு !!!

Atharva, atharva new movie, atharva trigger movie, atharvaa best movies, atharvaa full movie, Atharvaa Superb Speech, atharvaa trigger movie, athravaa latest speech, Ghibran, latest tamil movie updates, latest tamil movies 2022, Tanya Ravichandran, thamizh padam, trigger atharva movie, Trigger Movie, trigger movie atharva, trigger movie release date, trigger movie update, trigger pre release event, trigger tamil movie, Trigger Tamil Movie Team at SSS Jain College,கல்லூரி விழாவில் “ட்ரிகர்” திரைப்பட குழு !!!,Thamizhpadam,Kollywood Latest,Tamil Film News 2022, Kollywood Movie Updates,Latest Tamil Movies News,

சென்னை ஜெயின் பெண்கள் கல்லூரியில் நடந்த விழாவினில், அதர்வா நடிக்கும் “ட்ரிகர்” படத்தின் குழுவினர் கலந்துகொண்டனர். பல கலை நிகழ்ச்சிகள் நடந்த இந்த விழாவினில் இயக்குநர் சாம் ஆண்டன், தயாரிப்பாளார் சுருதி நல்லப்பா, நடிகர் அதர்வா முரளி ஆகியோர் படம் குறித்து மாணவிகளிடம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

PRAMOD FILMS சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி & சுருதி நல்லப்பா வழங்கும்,
சாம் ஆண்டன் இயக்கத்தில்,
அதர்வா முரளி நடிக்கும் திரைப்படம் “ட்ரிகர்” இப்படம் தூண்டல் எனும் அடிப்படையில் புதுமையான திரைகதையில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இவ்விழாவினில் தயாரிப்பாளர் சுருதி நல்லப்பா பேசியதாவது…
எங்கள் படத்தினை பற்றி உங்கள் முன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. இப்படத்தினை பற்றி முதன் முதலில் இயக்குநர் சாம் ஆண்டன் கூறியபோது கதை மிகவும் பிடித்திருந்தது. அதர்வா நடிக்க ஒப்புக்கொண்டதாக சொன்னவுடன் உடனே தயாரிக்க ஒப்புக்கொண்டேன். படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாகிறது நீங்கள் அனைவரும் தியேட்டரில் படம் பார்த்து ஆதரவளிக்க வேண்டும்

இயக்குநர் சாம் ஆண்டன் பேசியதாவது…
நீங்கள் அனைவரும் அதர்வாவை ரசிக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி. எங்கள் பட வெளியீட்டை ஒட்டி இங்கு உங்களை சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ட்ரிகர் ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். 100 படம் எடுக்கும்போதே அதர்வா விடம் மீண்டும் படம் செய்ய பேசியிருந்தேன். அதர்வாவுடன் வேலை செய்வது மிக எளிது. அவர் கடினமான உழைப்பாளி. இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. நீங்கள் அனைவரும் தியேட்டரில் இந்தப்படத்தை பாருங்கள் நன்றி.

நடிகர் அதர்வா பேசியதாவது..
இங்கு கல்லூரியில் உங்களின் உற்சாகத்தை பார்க்கும் போது, எனக்கு என் கல்லூரி நாட்கள் ஞாபகம் வருகிறது. மீண்டும் கல்லூரி செல்ல ஆசையாக இருக்கிறது. எங்கள் படத்தை உங்களிடம் கொண்டு வருவது மகிழ்ச்சி. உங்களுக்கு பிடிக்கும்படியாக ஒரு நல்ல படம் செய்துள்ளோம். 100 படத்திற்கு பிறகு மீண்டும் திரில்லர் என்ற போது யோசித்தேன் ஆனால் இந்தப்படத்தின் கதை மிக புதுமையாக இருந்தது. நான் வழக்கமான பாத்திரங்களிலிருந்து மாறுபட்டு நடித்திருக்கிறேன். இப்படம் ஒரு புது அனுபவமாக இருக்கும் அனைவரும் பாருங்கள் நன்றி.

பின்னர் கல்லூரி மாணவர்கள் சார்பில் அதர்வா மற்றும் படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

“ட்ரிகர்” திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். அருண் பாண்டியன், சீதா, கிருஷ்ண குமார், வினோதினி வைத்தியநாதன், முனிஷ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் மற்றும் இன்னும் பல முக்கிய நடசத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். திலீப் சுப்பராயன் ஆக்‌ஷன் கோரியோகிராஃபராக பணியாற்ற, ராஜேஷ் கலை இயக்கம் செய்துள்ளார், தீபாலி நூர் காஸ்ட்யூம் டிசைனராகவும், கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். சுரேஷ் சந்திரா & ரேகா D one (மக்கள் தொடர்பு), Lorven Studios (VFX), ஓமர் (நிர்வாகத் தயாரிப்பாளர்) மற்றும் கோகுல்.K (கிரியேட்டிவ் புரடியூசர்) ஆக பணியாற்றியுள்ளனர்.

இயக்குநர் சாம் ஆண்டன் எழுதி இயக்கும் ‘ட்ரிகர்’ திரைப்படத்தை, PRAMOD FILMS சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி & சுருதி நல்லப்பா தயாரிக்கின்றனர். Romeo Pictures வெளியிடும் இப்படம் செப்டம்பர் 23 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here