உலகம்மை தமிழ் திரைப்பட விமர்சனம்

உலகம்மை கதை

1970: நெல்லை மாவட்டம். கதையின் நாயகி உலகம்மா, அவரின் மாமாவான மாரியப்பனிடம் வேலை செய்துவருகிறார். ஒரு நாள் மாரியப்பன் தன் மகளுக்கு தெரியாமல் பெண் பார்க்க வேண்டும் என்பதற்காக, இவரின் மகளையும், உலகம்மாவையும் கோவிலுக்கு சென்றுவர சொல்கிறார். மாப்பிளையை ஏற்கனவே கோவிலுக்கும் வரவைத்துவிட்டார்.

Read Also: Demon Movie Review

மாப்பிள்ளை, உலகம்மையை மணப்பெண் என நினைத்து காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் உண்மையை அறிந்த மாப்பிள்ளை மாரியப்பன் மகளை வேண்டாம் என்கிறார். உலகம்மை தான் இதற்கு காரணம் என்று நினைத்த மாரியப்பன், உலகம்மையை எப்படியெல்லாம் பழி வாங்குகிறார் என்பதும், உலகம்மை எப்படி இதனையெல்லாம் எதிர்கொள்கிறார், என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் ஜெயபிரகாஷ் வீரப்பன் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡கதாநாயகியின் எதார்த்த நடிப்பு
➡மாரிமுத்து அவர்களின் நடிப்பு
➡அனைவரின் நடிப்பு
➡இசை ஞானியின் இசை
➡ஒளிப்பதிவு
➡அரசியல்பேசும் ஒருசில வசனங்கள்

படத்தில் கடுப்பானவை

➡காலகாலமாக பார்த்துவரும் கதைக்களம்
➡படம் எடுக்கப்பட்ட விதம்
➡வலுவற்ற திரைக்கதை

Rating: ( 2.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *