வாத்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

வாத்தியின் கதை

1998-ல் சமுத்திரக்கனி திருப்பதி இன்ஸ்டிடியூட் என்ற பெயரில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார், கல்வியில் எந்த அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியுமோ அந்த அளவிற்கு சம்பாதிக்கிறார், இவரின் பள்ளியில் மூன்றாம் படிநிலை ஆசிரியராக வேலை செய்பவர்தான் கதையின் நாயகன் தனுஷ் , ஒருசில காரணமாக மூன்றாம் படிநிலை ஆசிரியர்கள் அனைவரையும் கிராமங்களில் உள்ள அரசுபள்ளிக்கு வேலைக்கு அனுப்புகிறார் சமுத்திரக்கனி.

வேலூர் அருகில் உள்ள சோழவரம் என்ற கிராமத்திற்கு பாடம் எடுக்க செல்கிறார் தனுஷ், ஆனால் அங்கு உள்ள மக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை வேளைக்கு அனுப்புகின்றனர், அதனால் யாரும் பள்ளிக்கு வரவில்லை, மக்கள் அனைவரிடமும் தனுஷ் பேசி பிள்ளைகளை பள்ளிக்கு வர வைக்கிறார், படிப்பின் முக்கியத்துவத்தையும், அதனால் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார், மாணவர்களும் படித்து தேர்வில் வெற்றி பெறுகின்றனர்.

இதனால் தன் திருப்பதி நிறுவனத்திற்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று, ஆத்திரமடைந்த சமுத்திரக்கனி தனுஷை கண்டித்து அந்த பள்ளியில் இருந்து வெளியேற்றுகிறார், தனுஷும் முடிந்த அளவு எதிர்த்து போராடுகிறார், கடைசியில் சமுத்திரக்கனி தனுஷை முடக்கினாரா ? இல்லையா ? என்பதும் தனுஷ் மாணவர்களுக்கு கொடுக்க நினைத்த கல்வியை கொடுத்தாரா ? இல்லையா ? என்பதுதான் படத்தின் மீதி கதை…

இந்த கதையை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை
கதைக்கரு
வசனம்
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
GV. பிரகாஷின் பாடல் & பின்னணி இசை

படத்தில் கடுப்பனவை
கால காலமாக கண்ட கதைக்களம்
ஒருசிலரின் தமிழ் டப்பிங்

Rating: ( 3.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைசச்சின் – அபர்நிதி நடிக்கும் ‘Demon’ படத்தின் முதல் பார்வை வெளியானது!
அடுத்த கட்டுரைபகாசூரன் தமிழ் திரைப்பட விமர்சனம்