பெடியா திரைப்படத்தைப்பற்றி மனம் திறக்கிறார் நடிகர் வருண் தவான்

வருண் தவான் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் வணிக ரீதியான வெற்றி மற்றும் விமர்சகர்களின் பாராட்டு ஆகிய இரண்டையும் பெற்று வரும் நிலையில், சவால் மிக்க வேடங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

புதுமையான கதைக்களத்துடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திறப்படங்கள் மீதான அவரது தொடர் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கும் ‘பெடியா’ திரைப்படத்தின் டிரெயிலர்.

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த டிரெய்லரின் முக்கிய அம்சங்களாக நகைச்சுவை மற்றும் பிரமாண்ட வி எஃப் எக்ஸ் காட்சிகள் உள்ள நிலையில், அவற்றை மிஞ்சும் வகையில் அமைந்து அனைவரின் பேசுபொருளாக ஆகியிருப்பது வருண் தவானின் தோற்றம் மற்றும் நடிப்பு என்றால் அது மிகையாகாது. மனிதனாகவும் மிருகமாகவும் அவர் தோன்றும் காட்சிகளில் அவரது உழைப்பும் ஈடுபாடும் மிளிர்கின்றன.

ப்ரோமோக்களில் எந்தளவு வருண் வித்தியாசமாகத் தெரிகிறார் என்பது குறித்து இணையத்தில் கருத்துகள் குவிந்து வருகின்றன, ஓநாயாக மாறும் ஒரு மனிதனின் கதாபாத்திரத்திற்குள் நுழைவதற்கு கடுமையான ஆயத்த பணிகளை அவர் மேற்கொண்டார் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இப்பயணம் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட வருண், “ஒரு வரி கதைக்கருவைக் கேட்டு பெடியாவில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அன்றிலிருந்து இந்த படத்துடன் நான் ஒன்றி விட்டேன், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் தொடர் ஆதரவுக்கு நன்றி. நான் நடித்ததிலேயே மிக சவாலான கதாபாத்திரம் இது. கிரியேச்சர் காமெடி எனப்படும் இயற்கை படைப்பு சார்ந்த நகைச்சுவை திரைப்படப் பிரிவில் இது எனது முதல் பயணமாக இருந்தாலும், இயக்குநர் அமர் எனக்கு மிகவும் கைகொடுத்தார். ஒரு நடிகனாக பலவிதமான பாத்திரங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய கனவு. அந்த முயற்சியில் பெடியா மிக முக்கியமான முன்னேற்றம் ஆகும்”, என்றார்.

‘பெடியா’ டிரெய்லர் மூலம் வெளிப்படும் இதுவரை கண்டிராத கதை, சிறப்பான நகைச்சுவை மற்றும் பிரமாண்ட காட்சிகளுக்காக ஊடகங்களும் ரசிகர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தனது கதாபாத்திரத்தின் மீதான முழுமையான அர்ப்பணிப்புடன், வருண் தன்னை வெளிப்படுத்தி உள்ள விதம் பெரிதும் பேசப்படுகிறது. இப்படம் பெறப்போகும் மாபெரும் வெற்றிக்கான அடையாளங்களாக இவை அனைத்தும் அமைந்துள்ளன.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள ‘பெடியா’ நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here