ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது

சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல ஆண்டுகளாக தரமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிடுவதில் புகழ்பெற்றது மற்றும் இது தமிழ் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஓடிடி ப்ளாக்பஸ்டர் வெற்றியான ‘அன்பறிவு’ படத்திற்குப் பிறகு சத்யஜோதி ஃபிலிம்ஸ், ‘யங் சென்சேஷன்’ ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் மீண்டும் ‘வீரன்’ படத்தில் இணைந்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பிறந்தநாளான இன்று இந்தப் படத்தில் அவரது அசத்தலான தோற்றத்துடன் வெளியாகி இருக்கும் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஃபேண்டசி மற்றும் வேக்கியான எலிமென்ட்ஸ் கலந்த அம்சத்துடன் ’வீரன்’ படத்தின் முதல் பார்வை அமைந்து சினிமா ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை சரியான அமைப்புடன் ஈர்க்கும் வகையில் வெளியாகியுள்ளது.

‘மரகத நாணயம்’ மூலம் புகழ் பெற்ற இயக்குநரான ஏ.ஆர்.கே. சரவன் ‘வீரன்’ படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இதற்கு முன்பு நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், இவருடைய ஸ்டைலும் நடிப்பும் அவருடைய ரசிகர்களுக்கே புதிதான விஷயமாக இதில் இருக்கும்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் ஏ.ஆர்.கே. சரவன் ஆகியோர் இதற்கு முன்பு கமர்ஷியலாக வெற்றிப் படத்தைக் கொடுத்திருப்பதால் இவர்கள் மீண்டும் இணைந்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் வர்த்தக வட்டாரத்திலும் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக, இதன் முதல் பார்வை வெளியாகி இருப்பது எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது.

படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடையும் தருணத்தில் இருக்கிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் கோடை விடுமுறை 2023-க்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

நகைச்சுவை, ஆக்‌ஷன் ஆகியவற்றின் நேர்த்தியான கலவையுடன், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களின் ரசனைகளுக்கு ஏற்ப ஒரு முழுமையான விவேகமான குடும்ப பொழுதுபோக்குப் படமாக ‘வீரன்’ இருக்கும்.

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க, ’வீரன்’ படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தை ஜி.சரவன் மற்றும் சாய் சித்தார்த் இணைந்து தயாரிக்கின்றனர்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரம்:

பேனர்: சத்யஜோதி ஃபிலிம்ஸ்

நடிகர்கள்: ஹிப்-ஹாப் தமிழா, அதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர்.

இயக்கம்:ஏ.ஆர்.கே.சரவன்,
இசை:ஹிப்-ஹாப் தமிழா,
ஒளிப்பதிவு: தீபக் டி மேனன்,
படத்தொகுப்பு: ஜி.கே பிரசன்னா,
கலை: என்.கே.ராகுல்,
சண்டைப்பயிற்சி: மகேஷ் மேத்யூ,
விளம்பர வடிவமைப்பாளர்: ட்யூனி ஜான்,
படங்கள்: அமீர்,
ஆடை வடிவமைப்பாளர்: கீர்த்தி வாசன்

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது’- நடிகை தமன்னா
அடுத்த கட்டுரைடிரம்ஸ் சிவமணி இசையில், தஞ்சையப்பா ஸ்டுடியோஸ் வழங்கும், “புரடக்சன் நம்பர் 1”புதுமையான ரொமாண்டிக் க்ரைம் திரில்லர் !