வீரன் தமிழ் திரைப்பட விமர்சனம்

வீரன் கதை

2007: பொள்ளாச்சி அருகில் வீரனூர் என்கிற சிறுகிராமம் உள்ளது, அந்த ஊரில் வீரன் என்ற காவல் தெய்வம் இருக்கிறது. தெய்வம் மீது நம்பிக்கையே இல்லாத கதையின் நாயகன் குமரனுக்கு மின்னல் தாக்கி உடம்பில் பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் குமரன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார், அந்த மின்னல் தாக்கியதில் குமரனுக்கு சில சக்திகள் கிடைக்கின்றன, அதனை குமரன் கையாளவும் கற்றுக்கொள்கிறான்.

Read Also: Thuritham Movie Review

ஊருக்கு ஒரு பிரச்சனை வருவதை அறிந்த கதையின் நாயகன் 12 வருடங்கள் கழித்து ஊருக்கு வருகிறார் , லேசர் கேபிள் என்கிற தனியார் திட்டம் ஊருக்கு வந்தால் அந்த கேபிள் வெடித்து ஒரே அழிந்துவிடும், அந்த கேபிள் வீரன் கோவில் வழியாக வருவதற்கு வீரன் கோவிலையும் இடிக்க தனியார் நிறுவனம் திட்டமிடுகிறது, இந்த சூழலில் நாயகன் குமரன் தனது சக்திகளை கொண்டு வீரனாக மாறுகிறார், அப்படி வீரனாக மாறி குமரன் ஊரையும் , வீரன் கோவிலையும் காப்பாற்றினாரா? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை மரகத நாணயம் படத்தின் புகழ் இயக்குனர் ARK சரவண் மீண்டும் ஒரு வித்யாசமான கதைக்களத்தை இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

கதைக்கரு
சிறப்பான இரண்டாம்பாதி கதைக்களம்
அனைவரின் நடிப்பு
நம்மை சிரிக்க வைக்கும் எதார்த்த காமெடிகள்
பின்னணி இசை
தரமான காட்சி விளைவுகள் ( VFX )

படத்தில் கடுப்பானவை

மெல்ல நகரும் முதல்பாதி கதைக்களம்
படத்தின் நீளம்

Rating : ( 3.25/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *