“விஷமக்காரன்” திரை விமர்சனம்

மற்றவர் மனதை கையாளும் திறமை கொண்ட நாயகன் அக்னி அந்த திறமையை அவருக்கு எப்படி சாதகமாக்கி கொள்கிறார் என்பது தான் கதை

மக்களுக்கு மருத்துவ ரீதியாக ஆலோசனை வழங்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறார் அக்னி, அப்படி அதே வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் போது நாயகி ஜகிரி அவரை சந்திக்கிறார் எதற்காக என்றால் ஜகிரியின் திருமணமான நண்பர்களுக்குள் புரிதல் இல்லாமல் இருவரும் பிரிவதற்கு முடிவு எடுக்கிறார்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நாயகன் அக்னியிடம் கூப்பிட்டுவருகிறார் அப்படி அங்கு அவர்கள் சந்திக்கிறார்கள் பார்த்த உடனே இருவருக்கும் காதல் மலர்கிறது, அந்த காதல் சில மாதங்கள் கழித்து திருமணம் வரை கொண்டு செல்கிறது , திருமணம் முடிந்த சில நாட்கள் கழித்து அவர்கள் இருவரும் ஹோட்டலுக்கு செல்கிறார்கள் அப்படி அவர்கள் சென்ற இடத்தில அக்னியின் முன்னால் காதலியான தரங்கிணியை சந்திக்கிறார் அக்னி …

மனைவி ஜகிரியிடம் காதலி தரங்கிணியை பற்றி அக்னி சில விஷயங்கள் கூறுகிறார்… நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலித்து வந்தோம் ஆனால் ஒரு கட்டத்தில் தரங்கிணி மேல் படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்வதாக சொன்னார் நான் அதை மறுத்தேன் அந்த ஒரு காரணத்தால் எனக்கும் தரங்கிணிக்கும் பிரிவு ஏற்பட்டது அதற்கடுத்து இப்போது தான் சந்தித்தேன் என்று மனைவி ஜகிரியிடம் கூறுகிறார் ஆனால் மனைவிக்கோ சற்று சந்தேகம் ஏற்பட்டு வீட்டில் சில இடங்களில் வேவு பார்பதற்க்காக மறைமுக கேமராவை வைக்கிறார் சில தினங்கள் கழித்து மனைவி பிரிந்து செல்கிறார் அந்த வருத்தத்தில் இருக்கும் போது காதலி தரங்கிணி அக்னி வீட்டிற்கு வருகிறார் அக்னி மது போதையில் இருந்ததால் அக்னி தரங்கிணியிடம் தவறாக நடந்து கொள்கிறார், அதனை மனைவி ஜகிரி மறைமுக கேமரா மூலம் சமூக வலைத்தளங்களில் அவரை அறியாமல் தவறாக வெளியிகிறார் இந்த சூழ்நிலையை அக்னி தனது திறமை மூலம் எப்படி கையாண்டார் என்பதும் கடைசியில் யார் அக்னியுடன் இருப்பார் என்பது தான் மீதி கதையாக உள்ளது

நடிகர்கள்

அக்னி – வி,
ஐகிரி – அனிக்கா விக்ரமன்,
தரங்கிணி – சைத்ரா ரெட்டி

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு : J கல்யாண்
இசை : கவின்-ஆதித்யா
படத்தொகுப்பு : S.மணிக்குமரன்
இயக்கம் : V
தயாரிப்பு : ஹனி பிரேம் ஒர்க்ஸ்
மக்கள் தொடர்பு : KSK செல்வா

படத்தில் சிறப்பானவை
*விறுவிறுப்பான கதைக்களம்

  • அனைவரின் எதார்த்த நடிப்பு
    *ஒளிப்பதிவு

படத்தில் சீரானவை

  • இசை
  • கால காலமாக கண்ட அதே கதை
  • அதிகமாக ஆங்கில உரையாடல்
  • Rating {2.5/5}

Kamal And Lokesh Kanagaraj Interactions With Press Clik Here

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here