விவேக், ஒரு நடிகராக இருந்தாலும், சமூகம் மீது அக்கறை உடையவர். இயற்கையின் பாதுகாவலராக விளங்கினார்; எனவே, அவருக்கு மரியாதை செய்ய வேண்டும்’ என, அமைச்சரும், பிரதமரும் தீவிரமாக யோசித்து வருகின்றனர். ‘இது குறித்து விரைவில் ஒரு திட்டத்தை தயார் செய்யுங்கள்’ என, அமைச்சரிடம், பிரதமர் கூறியுள்ளார். இரண்டு திட்டங்களுடன் தயாராக உள்ளார் பிரகாஷ் ஜாவடேகர். ‘சென்னையில் உள்ள, ‘ஆல் இந்தியா ரேடியோ’ கட்டடத்திற்கு விவேக் பெயரை வைக்கலாம் அல்லது விவேக் படம் போட்ட ஸ்டாம்ப் வெளியிடலாம்’ என, ஆலோசனை கூறியுள்ளார். இந்த இரண்டில், ஸ்டாம்ப் திட்டம் ஒப்புதல் பெற்று, விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.🌐
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.