நடிகர் விவேக் புகைப்படத்துடன் ஸ்டாம்ப் வெளியிட மோடி திட்டம் !!

பிரபல காமெடி நடிகர் விவேக் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார் என்ற தகவல் தமிழ் திரையுலகை மட்டுமின்றி இந்திய திரை உலகையே உலுக்கியது

Actor Vivek critical, undergoes angioplasty in Chennai hospital | Chennai  News - Times of India

நடிகர் விவேக்கிற்கு ஏப்ரல் 16ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 17ஆம் தேதி அதிகாலையிலேயே அவர் மரணமடைந்தார். இதனை அடுத்து விவேக்கிற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் அஞ்சலி செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

Tamil actor Vivek passes away after suffering heart attack post vaccination

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கொள்கையை பின்பற்றி வந்த விவேக், அவருடைய கோரிக்கையின்படி ஒரு கோடி மரங்களை நடும் முயற்சியில் இருந்தார். சுமார் 33 லட்சத்திற்கும் மேலாக அவர் மரங்களை நட்டு உள்ள நிலையில் திடீரென மரணம் அடைந்து விட்டார்

Vivek (actor) - Wikipedia

இந்த நிலையில் நடிகர் விவேக்கிற்கு உரிய மரியாதை செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமர் மோடி ஆகியோர் நடிகர் விவேக் படம் போட்ட தபால்தலையை வெளியிடத் திட்டமிட்டு உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Actor Vivek REAL Biography | kurukkalpatti
YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here