விட்னஸ் கதை
பார்த்திபன் என்ற 20 வயது இளைஞனும் அவரது அம்மாவும் சந்தோஷமாக வாழ்கின்றனர்.பார்த்திபன், கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யச் செல்லும் போது எதிர்பாராதவிதமாக விஷ வாயு தாக்கி உயிரிழக்கிறார்.அந்த இளைஞரது அம்மாவான இந்திராணி(ரோகினி ) , ஒரு துப்புரவுப் பணியாளர். தனது ஒரே மகனை இழந்துவிட்ட இந்திராணி, சட்டவிரோதமாக அவனைக் கூட்டிச்சென்று அந்தப் பணியில் ஈடுபடுத்தி, கொன்றவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார்.பெத்தராஜூ என்ற தொழிற்சங்கத் தலைவர், அவருக்கு உறுதுணையாக வருகிறார். இன்னொருபுறம், பார்வதி என்ற இளம் பெண் இந்திராணி்யிடம் முக்கியமான சில ஆதாரங்களை ஒப்படைக்கிறாள்.
அந்த ஆதாரங்களைக் கொண்டு பெத்தராஜுவும், இந்திராணியும், நீதிமன்றத்தை நாடுகின்றனர்.அதன் விளைவாக, சம்பவம் நடந்த பகுதியின் கழிவுநீர்ப்பணி ஒப்பந்ததாரருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.
இதற்கான பதிலடியாக, இந்திராணி, பார்வதியின் மற்றும் பெத்தராஜுவின் வாழ்விலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன, அவர்களுக்கு பண ரீதியாகவும் , மன ரீதியாகவும் மேலும் பல கஷ்டங்கள் வருகிறது. இவை அனைத்தையும் சமாளித்து, நீதிக்காக இந்திராணி போராடுகிறார், கடைசியில் பார்த்திபனின் இறப்பிற்கு நீதி கிடைத்ததா? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை…
இதனை, இயக்குனர் தீபக் துப்புரவு பணியாளர்கள், அவர்கள் வாழ்வில் படும் கஷ்டத்தை கூறியுள்ளார்
தற்போது இந்த விட்னஸ் SONY LIV -ல் OTT தளத்தில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது
Read Also: Varalaru Mukkiyam Tamil Movie Review
படத்தில் சிறப்பானவை
கதை
அனைவரின் எதார்த்த நடிப்பு
ஒளிப்பதிவு
வசனம்
படத்தில் கடுப்பனவை
மெல்ல நகரும் கதைக்களம்
Rating: ( 3/5 )