யானை முகத்தான் தமிழ் திரைப்பட விமர்சனம்

யானை முகத்தான் கதை

கதையின் நாயகன் கணேசன் தீவிர விநாயகர் பக்தனாக இருக்கிறார் , விநாயகர் பெயரான கணேசன் என்ற பெயரை வைத்துக்கொண்டு இவர் பலரை பல வழிகளில் ஏமாற்றுபவராக இருக்கிறார், பல பேரிடம் கடன் வாங்கிவிட்டு, அவர்களுக்கெல்லாம் பொய் மட்டுமே சொல்கிறார், மற்றும் கடன் கொடுத்தவர் விபத்தால் சாக வேண்டும் . மற்றும் அவர்களின் வீட்டில் கேட்ட செயல்கள் நடக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறார்.

அப்படி ஒரு நாள் கணேசன் விநாயகரிடம் வேண்டிக்கொண்டிருக்கும்போது இவருக்கு மட்டும் விநாயகர் காணாமல் போய் விடுகிறார் , ஆனால் மற்ற அனைவருக்கும் தெரிகிறார், அது ஏன் நமக்கு மட்டும் கடவுள் தெரியவில்லை என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, திடீரென்று கணேசன் முன்பு விநாயகர் தோன்றி , இனியாவது மற்றவர்களுக்கு நல்லது செய் அப்படி செய்தால் நான் உனக்கு தெரிவேன் என்று கூறுகிறார், கடைசியில் விநாயகர் சொன்ன மாதிரி கணேசன் செய்தாரா? இல்லையா? என்பதும் கணேசன் கண்களுக்கு விநாயகர் தெரிந்தாரா ? இல்லையா ? எனபதே படத்தின் மீதி கதை…

Read Also : Deiva Machan Movie Review

இந்த கதையை இயக்குனர் ரெஜிஷ் மிதிலா இயக்கியுள்ளார்…

படத்தில் சிறப்பானவை
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
பின்னணி இசை
ஒளிப்பதிவு
தரமான சில வசனங்கள்

படத்தில் கடுப்பானவை
லாஜிக் இல்லாத சில காட்சிகள்

Rating : ( 2.5/5 )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *