‘ஸ்வீட் ஹார்ட்’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த யுவன் சங்கர் ராஜா

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரியோ ராஜ் – கோபிகா ரமேஷ் நடிப்பில், இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் வெளியான ‘ ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், ‘படம் நன்றாக இருக்கிறது’ என்ற பாசிட்டிவான விசயத்தை மவுத் ஆஃப் டாக்காக பகிர்ந்து வருகிறார்கள். இதனால் ரசிகர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தத் தருணத்தில் இசை பணிக்காக வெளிநாட்டில் இருக்கும் படத்தின் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா படக் குழுவினருக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம், ‘ஸ்வீட் ஹார்ட் படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள செய்து, வெற்றி பெற வைத்ததற்காக வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். படத்தைப் பார்த்து ரசித்தவர்களும் நல்ல விதமான விமர்சனங்களை சமூக வலைதள பங்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் படக்குழுவினர் ஊக்கமடைந்துள்ளனர்.

காதலர்களுக்கிடையே ஏற்படும் உரசலும், விரிசலும் உணர்வுபூர்வமாகவும், வித்தியாசமான பின்னணியிலும் விவரித்திருப்பதால் இப்படத்தினை அனைத்து தரப்பினரும் பார்த்து ரசித்து வருகிறார்கள். குறிப்பாக காதலர்கள் இருவரும் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் சந்தித்துக் கொள்வதை பெருமிதத்துடன் குறிப்பிட்டு, ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைZEE5 தளம் வழங்கும், ஒரிஜினல் சீரிஸ், “செருப்புகள் ஜாக்கிரதை” மார்ச் 28 முதல் ஸ்ட்ரீமாகிறது !!
அடுத்த கட்டுரைஇயக்குநரும், நடிகருமான கே. பி. ஜெகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம் ‘