ZEE5 தளத்தின்  “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

ஒவ்வொரு மாதமும் தமிழ் பார்வையாளர்களுக்கென்றே பிரத்தியேகமான விருந்தளித்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery”  திரில்லர் வெப் சீரிஸ்  ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்..

ZEE5 நிறுவன அதிகாரி சிஜு பிரபாகரன் பேசியதாவது…
“ஒரு கோடை Murder Mystery” எங்கள் பயணத்தில் ஒரு புதுமையான வெப் சீரிஸ். செங்களம் தொடர் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்குப் பிறகு இந்த சிரீஸ் முழுக்கவே புதுமையானதாக இருக்கும். முதல் முறை இன்றைய தலைமுறையின் டீன் டிராமா, நவீன தலைமுறை ரசிக்கும் திரில்லராக இது உருவாகியுள்ளது. இதன் வரவேற்பைப் பார்க்க நாங்களும் ஆர்வமாக உள்ளோம். முந்தைய வெப் சீரிஸ் போல் இதற்கும் உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறோம்.

ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன்  பேசியதாவது…
சம்மரில் சூடான மர்டர் மிஸ்டரி கூலான பிரதேசத்திலிருந்து தர விரும்பினோம். அபிராமி மேடம் ஐஸ்வர்யா மேடம் நிறைய புதுமுகங்கள் நடிப்பில், இந்த வெப் சீரிஸ் தொழில் நுட்ப ரீதியாக மிக அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. செங்களம் சீரிஸுக்கு நல்ல ஆதரவைத் தந்தீர்கள். ஒவ்வொரு முறையும் புதுமையான அனுபவத்தைத் தரவே உழைத்து வருகிறோம். இந்த சீரிஸ் உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறோம்.

Sol Production Pvt.Ltd சார்பில் தயாரிப்பாளர் ஃபாசிலா அல்லானா பேசியதாவது…
கௌசிக் நரசிம்மன் மற்றும் சிஜு பிரபாகரன் சொன்னது போல் இது கொஞ்சம் புதுமையான திரில்லர். ரசிகர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் என்று நம்புகிறோம். இயக்குநர் விஷால் வெங்கட் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். அளவற்ற ஆதரவு தந்த ZEE5 நிறுவனத்திற்கு நன்றிகள்.

ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பேசியதாவது…
எனக்கு வாய்ப்பளித்த விஷால் வெங்கட், தயாரிப்பாளர் ஃபாசிலாவுக்கு நன்றிகள், என் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள். சீரிஸை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் சுதர்சன் N குமார் பேசியதாவது …
இந்த சீரிஸில் பின்னணி இசையமைத்துள்ளேன். மிகப்புதுமையான அனுபவமாக இருந்தது. நான் பர்மா படத்திற்கு இசையமைத்துள்ளேன். சில காலம் தொலைக்காட்சி பக்கம் வேலை பார்த்தேன். இப்போது இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ZEE5 கௌசிக் மிகப்பெரும் ஆதரவு தந்தார்.  இயக்குநர் மற்றும் ZEE5 நிறுவனத்திற்கு நன்றி.  எல்லோருக்கும் நன்றி.

நடிகர் ஆகாஷ் பேசியதாவது…
ZEE5 மற்றும் மீடியாவுக்கு என் முதல் நன்றி. இந்த சீரிஸை எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி எடுத்துள்ளோம். நிறைய உழைத்துள்ளோம், உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறோம். உங்கள் ஆதரவை தாருங்கள். என் படக்குழுவிற்கு இந்நேரத்தில் நன்றிக் கூறிக்கொள்கிறேன். எல்லோருக்கும் நன்றி.

நடிகை அபிதா பேசியதாவது…
கமலிக்கு பிறகு எனது அடுத்த பங்களிப்பு. எல்லோரும் கடுமையாக உழைத்து இந்த சீரிஸை உருவாக்கியுள்ளோம். பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகை நம்ரதா பேசியதாவது…
சம்மர் டைமில் எங்கள் சீரிஸ் ரிலீஸ் ஆகிறது. எல்லோருக்கும் புது அனுபவமாக இருக்கும்.  நான் தாரா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்தருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடிக்குமென நம்புகிறோம் நன்றி.  விஷால் வெங்கட் சார்,  ZEE5 நிறுவனத்திற்கு நன்றி.

நடிகர் ராகவ் பேசியதாவது…
இந்த சீரிஸ் பாம்பே நிறுவனத்தின் தயாரிப்பு,  எழுத்தாளரும் மும்பையை சேர்ந்தவர். ஆன்லைனில் ஆடிசன் கேட்டிருந்தபோது,  நான் இதில் வாய்ப்புக் கேட்டேன். அவர்கள் சார்மிங்காகவும் இருக்கனும் வயலண்டாகவும் இருக்கனும் அப்படி ஒரு ஆள் தேவை என்றார்கள். இதே காரணத்திற்காக தான் பாலசந்தர் சார் என்னை நடிக்க வைத்தார். என்னைப்பற்றி அவர்களுக்கு தெரியாது என்பதால், நான் ஒரு காட்சி நடித்து அனுப்பினேன். அவர்களுக்கு பிடித்து என்னை நடிக்க வைத்தார்கள். கௌஷிக் உடன் முன்பாகவே இணைந்து ஒரு சீரிஸ் வேலை பார்த்தோம் அது வெளியாகவில்லை, ஆனால் இந்த சீரிஸில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருமே மிகச்சிறந்த திறமைசாலிகள் இந்த சீரிஸ் சிறப்பாக வர வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்  நன்றி.

நடிகை லிசி ஆண்டனி  பேசியதாவது…
ZEE5 உடன் எனது ஆறாவது சீரிஸ் இது. என் முதல் படத்திலிருந்து எனக்குப் பெரிய ஆதரவு தந்து வருகிறீர்கள் அதற்கு நன்றி. இந்த சீரிஸில் நடிகை அபிராமி, மிகச்சிறந்த நண்பராகக் கிடைத்துள்ளார். இந்த சீரிஸ் மிக நன்றாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் விஷால் வெங்கட்  பேசியதாவது..
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்கு நீங்கள் மிகப்பெரிய ஆதரவைத் தந்தீர்கள் அதற்கு மிகப்பெரிய நன்றி. இந்த வெப் சீரிஸ் இயக்கச் சொல்லி ஜீ5 யிலிருந்து கால் வந்தது. Sol Production Pvt.Ltd  உடன் முன்னதாகவே அஸிஸ்டெண்டாக வேலை பார்த்துள்ளேன். இந்த சீரிஸ் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. மிகக்குறைந்த காலகட்டத்தில், இந்த வெப் சீரிஸை எடுத்தோம். அதற்கு ஒளிப்பதிவாளர், எடிட்டர், குழுவினர் அனைவரும் மிகப்பெரும் தூணாக இருந்தார்கள். அபிராமி மேடம், லிசி மேடமுடன் வேலை பார்த்ததில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். இந்த சீரிஸில் நடித்த டீன் பசங்க அனைவருமே பிரமிக்க வைத்தார்கள். திரைக்கதை வசனத்தை எழுதிய N பத்மகுமார்  மற்றும் ரோஹித் நந்தகுமாருக்கு நன்றி. கதை எழுதிய அனிதா மேடத்துக்கு நன்றி. முக்கியமாக இந்த வாய்ப்பை அளித்த ZEE5 க்கு நன்றி. ஒவ்வொரு வேலையுமே கற்றுக்கொள்ளும் நல்ல அனுபவமே. இந்த சீரிஸ் நன்றாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.

நடிகை அபிராமி  பேசியதாவது..
இந்த மாதிரி பிரஸ் மீட் எனக்கு புது அனுபவம். முதலில் எனக்கு வாய்ப்பளித்த ZEE5 க்கு நன்றி. இது எனது முதல் வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸ்க்கு அணுகும்போதே முழு திரைக்கதையும் தந்தார்கள். எனக்கு மர்டர் மிஸ்டரி ரொம்ப பிடிக்கும். இதன் திரைக்கதை மிகவும் பிடித்தது. இதில் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களும் மிகச்சிறந்த திறமைசாலிகள், அவர்களின் திறமையால் அழகாக இதனை உருவாக்கியுள்ளார்கள். பொதுவாக ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் போது, டைட்டில் கேரக்டர் நடிப்பார்கள். ஆனால் நான் இந்த வெப் சீரிஸ் நடிக்க காரணம் இதன் திரைக்கதை தான், அவ்வளவு அற்புதமாக இருந்தது. டீன் பசங்களின் உலகை அவ்வளவு தத்ரூபமாக எழுதியிருந்தார்கள் அதே போல் என் கதாபாத்திரம் அம்மா பாத்திரம் அத்தனை அழகாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

Sol Production Pvt.Ltd சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸை, இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை N பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுதியுள்ளனர்.

நடிகை அபிராமி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதிரடி திருப்பங்களுடன் பரபரப்பான அனுபவம் தரும் “ஒரு கோடை Murder Mystery” வெப் சீரிஸை ZEE5 தளத்தில் 2023 ஏப்ரல் 21 முதல் கண்டுகளியுங்கள்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here