அருள்நிதியின் K-13 படம் ஒரு பார்வை

நடிகர் அருள்நிதி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் எல்லோரும் நம்பிக்கையோடு திரையரங்கிற்கு போகலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது. அந்த வகையில் இதுக்கு முன்பு வந்த படத்தை தொடர்ந்து K-13 சஸ்பென்ஸ் த்ரில்லரை தேர்ந்தெடுத்துள்ளார் அருள்நிதி, இந்த படமும் மக்களை கவர்ந்ததா? என்று இந்த விமர்சனம் மூலம் பார்க்கலாம்.

கதைக்களம்
திரையுலகில் ரொம்ப நாட்களாக உதவி இயக்குனராக இருக்கின்ற அருள்நிதி, இயக்குனர் ஆவதற்கு முயற்சி செய்து வருகின்றார். ஒரு கட்டத்தில் இந்த படத்தோட ஹீரோயின் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை கிளப்பில் சந்திக்கின்றார் அருள்நிதி. முதல் சந்திப்பிலேயே அருள்நிதி மேல் ஒரு காதல் வர, அவரை தன் வீட்டிற்கு அழைத்து செல்கின்றார். பிறகு மறுநாள் காலையில் அருள்நிதி ஒரு சேரில் கட்டிப்போட்டு இருக்க, ஷ்ரத்தா அவர்கள் தன் கையை அறுத்துக்கொண்டு இறந்துள்ளார். அந்த நேரத்தில் அருள்நிதிக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை, அவருக்கு மட்டுமில்லை படத்தை பார்க்கும் நமக்கும் தான். இதனை தொடர்ந்து நடக்கும் விறுவிறுப்பான திருப்பமே இந்த K-13.

அருள்நிதி:
அருள்நிதி தொடர்ந்து ஒரு த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கின்றார், அந்த வரிசையில் இந்த படமும் அவருக்கு ஒரு சிறந்த படமே என்று சொல்லவேண்டும். அதனாலே என்னவோ மற்ற படங்களை போல் இந்த படத்திலும் கவனம் சிதறவிடாமல் அருமையாக நடித்திருக்கிறார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்
ஷ்ரத்தா ஸ்ரீநாத் படத்தின் ஆரம்பத்தில் இறந்து போகின்றார், இதுவே மிக பெரிய அதிர்ச்சியை முதல் பாதியிலேயே தந்துவிடுகின்றது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும்போது இவருக்கான கதாபாத்திரத்தையும், காட்சியையும் பொருத்தமாக செய்துள்ளார்.

கே 13 படத்தை முழுவதும் தெரிவிக்க முடியாது ஏனென்றால் படத்தினுடைய ட்விஸ்ட் உடைந்துவிடும். குறிப்பாக படத்தின் முதல் பாதியில் இருந்த பதட்டமும், விறுவிறுப்பும், இரண்டாம் பாதியில் குறைவாக உள்ளது. மொத்ததில் கிளைமேக்ஸ்ல வரும் ட்விஸ்ட் சிறப்பாக திரில்லர் அனுபவத்தை தந்தது.

இப்படத்தின் மிகப்பெரிய பலமாக சாம் சி எஸ்யின் இசை மற்றும் பின்னணி இசையில் மிரட்டிருக்கிறார். அதை போல் ஒளிப்பதிவும் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் ஏனென்றால் K 13 என்ற பிளாட்டில் நடந்தாலும் நமக்கு எங்கேயுமே நமக்கு சலிப்பு தட்டும் அனுபவத்தை கொடுக்கவில்லை.

மொத்தத்தில் K-13 படம் மூலம் எல்லோரையும் படம் பார்க்கும் போது சீட்டின் நுனியில் உட்காரவைக்கின்றார் புதுமுக இயக்குனர் பரத் நீலகண்டன்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here