ஐயப்பன் கோவில் விவகாரம் குறைத்து திரு. சிவகுமார்

பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு – திரு சிவகுமார்

“நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது. எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர்.

பெண்களின் உதிர போக்கை, மோப்ப சக்தி கொண்ட விலங்குகள் ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை ஆண்களுடன் அழைத்து செல்வதில்லை.

தற்போது காலம் நவீனமயமாகி விட்டது, பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை. நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது. இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு.

விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்” – இவ்வாறு திரு சிவகுமார் கூறினார் .

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here