கீ படம் ஒரு பார்வை

நடிகர் ஜீவா வெற்றி பட நாயகன் ஆக வேண்டும் என்று தான் நடித்து வரும் படங்களில் தன்னால் முடிந்தவரை கஷ்டப்பட்டு நடித்து வருகின்றார் அந்த வகையில் ஜீவா நடிப்பில் வெளிவந்த கீ படம் எப்பிடி வந்துள்ளது என்று பார்க்கலாம்.

கதைக்களம்
ஜீவா கல்லூரியில் படித்து வரும் இளைஞனாக இருக்கிறார். படிப்பில் ஆர்வம் இல்லாத ஜீவா ஹேக்கிங் விஷயத்தில் மிகுந்த ஆர்வத்தை காமித்து வருகின்றார். அதோடு அந்த கல்லூரியில் குறும்பு தனத்தோடு மின்னஞ்சல் உள்ள கடவு எண்ணை திருடுவது, அதன் மூலம் தேர்வு வினாத்தாள் என்று சிறு சிறு குறும்புத்தனம் செய்து வருகின்றார் ஜீவா. இன்னோரு பக்கம் இந்த படத்தின் வில்லன் ஜீவாவைவிட மிகப்பெரிய ஹேக்கிங் செய்யும் ஆளாக இருக்கும் வில்லன் பணம் பறிப்பது, தற்கொலைக்கு தூண்டிவிடுவது, கொலை செய்வது என இத்தனை விஷயங்களை செய்கிறார். ஒருகட்டத்தில் இதெல்லாம் ஜீவாவுக்கு தெரிய வர, யாரு அந்த வில்லன் என்று கண்டுபிடிக்க தொடங்குகிறார். இறுதியில் வில்லனை கண்டிபிடித்தாரா? இதில் யார் வெற்றி பெற்றது என்பதுதான் படத்தின் மீதி கதை.

ஜீவா:
நடிகர் ஜீவாவின் நடிப்பில் நாம் கடைசியாக பார்த்தது கலகலப்பு 2. அதை தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வருகின்றார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கழித்து ஒரு வழியாக வெளிவந்துள்ளது கீ படம். இதில் எல்லோரும் எதிர்பார்த்தபடி ஜீவா நடிப்பில் கலக்கியுள்ளார். அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கட்சிதமாக பொருந்திள்ளார்.இன்றும் காலேஜ் ஸ்டுடெண்ட் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகயுள்ளார்.
ஜீவாவின் நடிப்பால் விறுவிறுப்பு குறையவில்லை.

நிக்கி கல்ராணி:
கீ படத்தில் நிக்கி கல்ராணிக்கு பெரியதாக காட்சிகள் இவருக்கு இல்லையென்றாலும் அவர் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது. முக்கியமாக ஜீவா மற்றும் நிக்கி கல்ராணிக்கும் ஜோடி அருமையாக இருந்தது மட்டுமில்லாமல் பாடலிலும் ரசிக்க வைத்தனர்.

கோவிந்த் பத்மசூர்யா:
கீ படத்தில் வில்லனாக புதுமுகமாக அறிமுகமாயிருக்கும் கோவிந்த் பத்மசூர்யா பிரமாதமாக தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரை போல இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி காமெடியில் சீலன் இடங்களில் ரசிக்க வைத்துள்ளார்.

காலீஸ்:
தமிழ் சினிமாவில் இதுவரை வந்த ஜெனர்களில் இது ஒரு புதிய அத்தியாயம் என்று சொல்லலாம். டெக் திரில்லர் ஜெனர் தெரிந்தவர்களுக்கு ஏற்ற படம். படத்தின் கரு இன்றைய தொழிநுட்ப உலகத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றது அவற்றால் என்ன மாதிரியான விளைவுகள் நடக்கின்றன என்பதை கூறிருக்கும் படமாக இயக்கிருக்கின்றார் இயக்குனர் காலீஸ்.

இசை:
விஷால் சந்திரசேகர் இசையில் கீ படத்தை பார்ப்பவரின் ரசனையே கூட்டுகின்றது. பாடல் மற்றும் பின்னணி இசையில் கவனத்தோடு செயல்பட்டுருக்கின்றார் என்பது படத்தை பார்க்கும் போது தெரிகின்றது. குறிப்பாக பாடலை விட பின்னணி இசையில் படத்திற்கேற்ப பணியாற்றி தனது வேலையை நிறைவு செய்துள்ளார்.

படத்தை பற்றிய அலசல்:
படத்தின் மைய கரு புதுவிதமாக இருந்தாலும் இன்றைக்கு ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் என்று பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெரியப்படுத்தினாலும், படத்தில் திரைக்கதையில் அழுத்தம் இல்லலாததே மிக பெரிய குறை. இந்த மாதிரியான ஹேக்கிங் சம்மந்தப்பட்ட விஷயங்களை அசால்ட்கா காமித்தது படம் பார்பவர்களுக்கு புரியுமா என்பது சந்தேகமே. இப்படி படத்தில் நிறைய விஷயங்கள் கேள்வி எழுப்ப வைக்கிறது.

மொத்தத்தில் கீ படம் சமூக விழிப்புணர்வுடன் வந்தாலும் எல்லா ரசிகர்களையும் நிறைவு படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது .

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைKee Movie HD Stills
அடுத்த கட்டுரைவிஷாலின் அயோக்யா ஒரு பார்வை

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here