சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் ஓட்டுபோட்டதால் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை

கடந்த ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் என்பதால் தமிழகமே மிகவும் பரபரப்பாக இருந்தது. முக்கியமாக எல்லோரும் ஓட்டு போட்டுவிட்டோம் என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வண்ணம் இருந்தனர்.

இவர்களுடன் தமிழ் திரையுலக பிரபலங்களான சூப்பர்ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாசன், தல அஜித், தளபதி விஜய் என்று இன்னும் நிறைய பிரபலங்கள் காலையிலேயே வந்து தங்களது கடமையை நிறைவேற்றினர்.

ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் ஓட்டு போடும் போது மட்டும் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என பிரச்சனை ஆனது என்றும், பின் ஏகப்பட்ட வேலைகளுக்கு பிறகு தான் ஓட்டுபோட்டதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்கு போட்டிருக்கிறார். இந்த ஒரு விஷயத்தால் அவருக்கு வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here