சேவையே கடவுள்! விஜய் அஜித்திற்கு லாரன்ஸ் வேண்டுகோள

“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் ” என்ற வள்ளலார் சொல்லிற்கேற்ப 

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் தற்போது லாரன்ஸின் தாய் அறக்கட்டளைக்கு அதியாவசிய பொருளுதவிகளை செய்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

லாரன்ஸ் தனது தாயின் பிறந்தநாளான மே 2-ஆம் தேதி அத்தியாவசிய தேவைகள் இன்றி இந்த கொரோனா பூட்டுதல் சமயத்தில் அவதிப்படும் மக்களுக்கு உதவும் முயற்சியைத் தொடங்கினார். அவரது இந்த முயற்சிக்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 100 அரிசி மூட்டைகளை நன்கொடையாக வழங்கியிருந்தார். அதையடுத்து இயக்குநர் நடிகர் பார்த்திபன் கொரோனா நிவாரணத்திற்காக 1000 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கினார். அவர்கள் இருவருக்குமே தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

அதையடுத்து, கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள, கோலி சோடா-2, கடுகு, அழகாய் இருக்கிறார் பயமாய் இருக்கிறது ஆகிய படங்களை இயக்கிய பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், கொரோனா நிவாரணமாக 500 பிரட் பாக்கேட், உருளைக் கிழங்கு-50 கிலோ, வெங்காயம்- 50 கிலோ, தக்காளி- 50 கிலோ ஆகிய பொருட்களை வழங்கியுள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு விஜய் மில்டனுக்கு லாரன்ஸ் நன்றி தெரிவித்தார். 

மேலும்  “ஒரு கைப்பிடி அரிசி கூட பலரின் பசியை நிரப்பும், சேவையே கடவுள்” என்று கூறியுள்ள லாரன்ஸ், மேலும் விஜய், அஜித், கமல் ஹாசன், சூர்யா உள்ளிட்ட அனைத்து பெரிய நடிகர்களும் முன்வந்து இந்த முயற்சியை ஆதரிக்குமாறு லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார் !! 

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *