‘பரியேறும் பெருமாள்’ புகழ் கருப்பி நாய் நடிக்கும் ‘ஆத்தா’

‘பரியேறும் பெருமாள்’ படம் மூலமா புகழ் பெற்ற கருப்பி நாய் நடிக்க இருக்க படம்தான் ‘ஆத்தா’.

ஒரு தாய் தனது மகனுக்காகத் தன் வாழ்நாளையே தியாகம் செய்து விதவையாக வாழும் வாழ்க்கைதான் ‘ஆத்தா ‘படத்தின் கதை. முக்கியமா ஒரு மனிதனை மனிதனாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர சாதி மதத்தோடு பார்க்க கூடாது .

சாதி ஒரு மனநோய் என்பதை உணர்த்தி ஆணவப் படுகொலைகளை ஒழிக்கும் கதைக்கு அழகாக திரைக்கதை எழுதியுள்ளார் இயக்குநர் ஜீன்ஸ்காந்த் . இசைமைப்பாளாளர் தேவாவின் உதவியாளர் விஜய்மந்தாரா நான்கு பாடல்களுக்கு இசையமைக்கிறார்.

‘நான் கடவுள் ‘படத்தில் பிச்சைப் பாத்திரம் பாடலை பாடிய மது பாலகிருஷ்ணா ‘ஊருசனம் பொல்லாதது ஆத்தா’ என்கிற பாடலைப் பாடுகிறார். பிரியனின் உதவியாளர் சிட்டிபாபு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் உதவியாளர் மின்னல் முருகானந்தம் இரண்டு சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார்.

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கருப்பி நாய் ஹீரோவாக நடிக்கிறது. இந்த படத்தில் சத்தியராஜ் ,சரண்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆத்தா படத்தில் இரண்டு கதாநாயாகிகள் இஸ்மத் பானு, சுரேஸ்லேகா, நடிக்கின்றனர். இவர்களுடன் ஆம் ஆத்மி கட்சி அரசியல் பிரமுகர் மயிலை கணேசன், சண்டைப் பயிற்சியாளர் அயூப்கான் ,அப்துல் ரஹீம், மணிவாசகன் மாரிக்கனி ஈஸ்வரன் வில்லனாக நடிக்கிறார்கள்.

ஜீன்ஸ் ஸ்டுடியோ மிக பிரமாண்டமாகத் தயாரிக்கிற இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி, வீரபாண்டி ,கம்பம், கோம்பை ,மேகமலை போன்ற இடங்களில் நடைபெற இருக்கிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைAtharvaa Murali – Megha Akash Boomerang Press Meet Stills
அடுத்த கட்டுரைHip Hop Tamizha’s “Natpe Thunai” Movie Stills

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here