விஜய் சேதுபதி கேள்விகளுக்கு மோகன் ஜி பதில்கள் !!

உழைப்பையும் தன் மீது உள்ள நம்பிக்கையும் மூலதனமாக்கி வாழ்விலும், கலை துறையிலும் முத்திரை படைத்தவர் தான் விஜய் சேதுபதி.  தனது இயல்பான பேச்சு மற்றும் நடிப்பால் அனைவரையும் கவரும் திறன் கொண்டவர். அதே சமயம் பெரிய அளவில் சமூக வலைத்தளத்தில் ஈடுபாடு காட்டாதவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இந்நிலையில் விஜய் சேதுபதி தனது ட்வீட் மூலம் மீண்டும் அனைவரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “பசி என்றொரு நோய் இருக்கு… அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்… ஓ மை கடவுளே!!!” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு ஆதரவாகவும், அதே சமயம் எதிராகவும் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் அவர் டீவீட்டுக்கு பதில் ட்வீட் போட்டு விளக்கம் கொடுத்துள்ளார் இயக்குநர் மோகன். இதுகுறித்து மோகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “பசி எடுக்கலனா இந்த உலகம் எப்படி இயங்கும்.. பசி தான் உங்களை உழைக்க சொல்லும், பசி தான் அடுத்தவர் மீது கருணையை உருவாக்கும், பசியை அழிக்கும் நாள் முதல் உலகம் அழிய தொடங்கும் நண்பா..” என்று தெரிவித்துள்ளார்.

சினிமா பற்றிய தகவல்களை உடக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் படத்துடன் இணைந்திருங்கள் !!

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here