சூரியா 38ல் மலையாள நடிகை

என் ஜி கே மற்றும் காப்பான் படத்தில் நடித்து முடித்த நடிகர் சூர்யா அடுத்து இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பதை அதிகாரபூர்வமாக இப்படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் சூர்யாவின் 38 வது படமாக உருவாக இருக்க இந்த படத்தின் பூஜை நேற்று நடந்து முடிந்துள்ளது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா முரளிதரன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மலையாளத்தில் மஹேஷிண்டே பிரதிகாரம் படத்தில் பாஹத் ஃபாசில் ஜோடியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தென்னிந்தியா சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியா நடிக்கும் வாய்ப்பு வளர்ந்து வரும் நடிகை அபர்ணா முரளிதரனுக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டமே காரணம் என்று சொல்லலாம். நடிகர் சூர்யா இந்த படத்தில் கதாநாயகனாக நடிப்பதுமட்டுமில்லாமல் இந்த படத்தை தயாரிக்கவும் உள்ளார்.

இவருடன் விருதுகளில் பெரிதாக போற்றப்படும் ஆஸ்கர் விருதை வென்ற சீக்யா என்டேர்டைன்மெண்ட் குனீத் மோங்கா இணைந்து தயாரிக்கவுள்ளார். ஜி வி பிரகாஷ்குமார் இசைமைக்கின்ற இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றிலிருந்து தொடங்கவுள்ளது.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைOviya’s Ganesha Meendum Santhipom Movie Stills
அடுத்த கட்டுரைசஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாணின் ராசிக்கேற்ற படம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here