திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடிக்கும் ‘லக்கி மேன்’

கதையின் நாயகனாக யோகிபாபு தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வரிசையில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய படத்திற்கு ‘லக்கி மேன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ‘லக்கி மேன்’ திரைப்படம் உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தைப் பற்றி பேசுகிறது. அதிர்ஷ்டம் என்றால் என்ன, எந்த அளவிற்கு அது ஒருவனின் வாழ்க்கையில் வந்து சேர்கிறது என்பதையும் படத்தில் காட்டி இருக்கிறார்கள். சில…

Read More

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கும் ‘தண்டகாரண்யம்’

பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. இன்னிலையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை இரண்டாவது படமாக ‘தண்டகாரண்யம்’ படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாக நீலம் ஸ்டுடியோஸ், மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட். இணைந்து தயாரிக்கிறார்கள்….

Read More

விக்ரமன் – மகிழ்திருமேனியின் இணை இயக்குனர் சி.எம் லோகு இயக்கிய படம் “பரபரப்பு”

ஒரு முன்னாள் அமைச்சர் அவர் வருமானவரித்துறையினருக்கு பயந்து பதுக்கி வைத்த 500 கோடி ரூபாயை ஒரு அரசியல் புரோக்கர் அவரிடம் காப்பாற்றி வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறுகின்றனர். பின்பு பணத்தை பதுக்கி வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்களா ? இல்லை பணத்தை திருடி கொண்டு போனார்களா? என்பது தான் கதை. ஒரு சில சுயநல அரசியல்வாதிகளின் அராஜக போக்குகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் படமே பரபரப்பு என்கிறார் இயக்குனர் சி.எம் லோகு. விஜய் விஷ்வா, கில்மா கிரி…

Read More

‘இனி வலிமையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்’ – சிம்ஹா

நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘வசந்த முல்லை’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட மொழி முன்னோட்டத்தை ‘சூப்பர் ஸ்டார்’ சிவராஜ் குமாரும், தெலுங்கு மொழி முன்னோட்டத்தை ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியும், தமிழ் மொழி முன்னோட்டத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கத்தில் உருவான முதல் திரைப்படம் ‘வசந்த முல்லை’. இதில் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு…

Read More

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்

தெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘குஷி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர்…

Read More

“றெக்கை முளைத்தேன்” – படத்தின் தலைப்பை நடிகர் சசிகுமார் வெளியிட்டார்!

சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தின்‌ மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த இது கதிர்வேலன் காதல், விக்ரம் பிரபுவை வைத்து சத்ரியன், சசிகுமார் நடித்த கொம்பு‌ வெச்ச சிங்கம் டா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர்‌ தற்போது முதல் முறையாக பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். முதல் படத்தை தானே இயக்கியும் உள்ளார். இப்படத்தில் நடிகை தான்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்துள்ளார். கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு…

Read More

“கருமேகங்கள் கலைகின்றன” படத்தில் பாரதிராஜாவுடன் நடித்த தங்கர் பச்சான்.

“கருமேகங்கள் கலைகின்றன” தங்கர்பச்சான் இயக்கத்தில் ஏற்கனவே டைரக்டர்கள் பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர்,ஆர்.வி.உதயகுமார் நடித்து வருகிறார்கள். இந்த இயக்குனர்கள் வரிசையில் தங்கர் பச்சானும் ஒன்றாக இணைந்தார். இவர் வக்கீலாக கவுரவ வேடத்தில் நடித்தார். படத்தின் முக்கியமான காட்சியில் இவர் நடித்தது சிறப்பு அம்சம். இதன் படபிடிப்பு முடிவடைந்தது. நீண்ட நாட்களுக்கு பின் எடிட்டர் பி.லெலின் எடிட்டிங்கில் இதன் எடிட்டிங் வேலைகளும் முடிந்து இப்பொழுது டப்பிங் பணிகள் தொடர்து நடந்து வருகிறது. விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக்…

Read More

எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பரசுராம், தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா இணைகிறார்

‘கீத கோவிந்தம்’ படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் பரசுராமுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒருமுறை இணைகிறார். இது குறித்தான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பிளாக் பஸ்டர் வெற்றியான ‘கீத கோவிந்தம்’ படத்திற்கு பிறகு விஜய் மற்றும் பரசுராம் இரண்டாவது முறையாக இணைகின்றனர். இந்த புராஜெக்ட் புதிய மற்றும் தனித்துவமான கதையாக இருக்கும். ஸ்டார் தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இந்த புதிய படத்தைத் தயாரிக்க உள்ளனர். விஜய்யுடன் இணையும் இந்த படம்…

Read More

தேனாம்பேட்டை நாரதகான சபாவில் 15 ஆம் ஆண்டு ‘ஷா-கலா உட்சவ் -2023’ கலைநிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் கலை இயக்குநர், கலாபிரதர்ஷினி கலைமாமணி திருமதி பார்வதி ரவி கண்டசாலா அவர்களும் பொன்னியின் செல்வன் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி உஷா அபய ஸ்ரீஸ்ரீமால், இணைச்செயலர் முனைவர் ஹரீஷ் எல் மேத்தா, கல்லூரி முதல்வர் முனைவர் சா.பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினர் திருமதி பார்வதி ரவி கண்டசாலா அவர்கள் உரையாற்றுகையில் மாணவர்கள் மத்தியில் இக்கலைநிகழ்ச்சியில் கலந்து…

Read More

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஃபார்ஸி’ வலைதளத் தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியீடு

அமேசான் ப்ரைம் வீடியோ வழங்கும் புதிய வலைதள தொடரான ‘ஃபார்ஸி’ எனும் வலைதள தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனை அந்த தொடரின் நாயகர்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிட்டார். ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’, ‘வதந்தி – தி ஃபேபுள் ஆஃப் வெலோனி’ ஆகிய அசல் தொடர்களை அளித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் அமேசான் பிரைம் வீடியோ, அடுத்ததாக ‘மக்கள் செல்வன்’ விஜய்…

Read More