“அயோத்தி” திரைப்பட 50 வது நாள் கொண்டாட்டம்!!!

மதம் முக்கியமில்லை மனிதமே முக்கியம் என்பதை அழுத்தி சொல்லி மக்களின் மனங்களை வென்று பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது “அயோத்தி” திரைப்படம். Trident Arts ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் , யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் காவியமாக விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. அயோத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு…

Read More

சீட்டடெல் பிரீமியர் காட்சிக்காக உலகெங்கிலுமிருந்து ஒற்றர்கள் லண்டனில் ஒன்று சேர்க்கின்றனர்

ஏப்ரல் 28 ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஒரு பிரமாண்டமான உலக அரங்கேற்றத்திற்கு அமேசான் ஒரிஜினல் தொடர் சீட்டடெல் இன் ஒற்றர்கள் தயாராகி வரும் நிலையில், முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா, ஜோனாஸ் மற்றும் ஸ்டான்லி துச்சி, லெஸ்லி மான்வில்லே ஆகியோர் தங்களது உலகளாவிய சுற்றுப்பயணத்தின் நடுவே நிர்வாக தயாரிப்பாளர்களான ஜோ மற்றும் அந்தோனி ருஸ்ஸோ மற்றும் ஷோ ரன்னர், டேவிட் வெயில் ஆகியோருடன் இணைந்து லண்டன் பிரீமியரில் பங்கு பெற்றனர். அதிரடிக் காட்சிகள்…

Read More

டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘ஆதி புருஷ்’

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் ஜூன் 13ஆம் தேதியன்று பிரபாஸ் நடித்திருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் திரைப்படம் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. இதன் மூலம் ‘ஆதி புருஷ்’ தனது உலகளாவிய அரங்கேற்றத்தை தொடங்குகிறது. இயக்குநர் ஓம் ராவத்- தயாரிப்பாளர் பூஷன் குமார் -நட்சத்திர நடிகர் பிரபாஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’, டிரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்படுவதன் மூலம் இந்திய சினிமா, உலக அரங்கில் தன்னுடைய அடுத்த கட்ட முன்னகர்வை…

Read More

‘சன்னிதானம் PO’ படப்பிடிப்பில் இணைந்த ‘யோகிபாபு’..!

விவிகே என்டர்டெயின்மென்ட், சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் வி விவேகானந்தன், மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் தயாரித்து வரும் படம் ‘சன்னிதானம் PO’. இந்தப்படத்தை ராஜீவ் வைத்யா இயக்குகிறார். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் தொடர்ந்து கதையின் நாயகனாகவும் வெற்றி பவனி வரும் யோகிபாபு இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். பிரபல நடிகர் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ், வேலராமமூர்த்தி, பிரமோத் ஷெட்டி,…

Read More

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த நடிகர் சிலம்பரசன் டி ஆர் !!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் டி ஆர் இன்று தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஏராளமான ரசிகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டு தனது அன்பை பகிர்ந்து கொண்டார் சிலம்பரசன் டி ஆர்.

Read More

நடிகர் சைஃப் அலிகான் ‘என்டிஆர் 30’ படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் படப்பிடிப்பை தொடங்குகிறார்!

தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் அதிகாரப்பூர்வமாக ‘என்டிஆர் 30’ படக்குழுவில் இணைந்துள்ளார். மேலும் கதாநாயகன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கி வரும் இந்தப் படம் மூலம் ஜூனியர் என்டிஆர் மற்றும் சைஃப் அலிகான் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். ’NTR 30’ திரைப்படம் தெலுங்கு மொழியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்‌ஷன்- ட்ராமா திரைப்படம். இதில் சைஃப் அலிகான், ஜூனியர் என்டிஆர் உடன் முக்கிய கதாபாத்திரத்தில்…

Read More

தமிழ் சினிமாவில் ‘ போர் தொழில்’ மூலம் நேரடியாக களமிறங்கும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்

ஆர். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தினை தயாரித்திருப்பதன் மூலம், இந்தியாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தமிழ் திரையுலகில் நேரடியாக களமிறங்கியிருக்கிறது. இந்தியாவின் வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய படைப்புகளை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட். இந்நிறுவனம் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புலனாய்வு திரில்லர் ஜானரிலான ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர்…

Read More

‘குலசாமி’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!!

MIK Productions Private Limited தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் ‘குலசாமி’. ஏப்ரல் 21 ஆம்தேதி திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் சரவண சக்தி பேசியதாவது… இப்படத்திற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு முதல்…

Read More

“ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ், ZEE5 தளத்தில் ஏப்ரல் 21 முதல் !!

தமிழில் தொடர்ந்து தரமான படைப்புகளைத் தந்து, ரசிகர்களைக் கவர்ந்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளம், தனது அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸை வெளியிடுகிறது. பள்ளி மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியில், புதுமையான திரில்லராக இந்த வெப்சீரிஸ் உருவாகியுள்ளது. Sol Production Pvt.Ltd சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸை, இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை N பத்மகுமார் மற்றும் ரோஹித்…

Read More

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

இந்திய திரை பிரமாண்டத்தை அடுத்த கட்டத்திற்கு உயரத்திய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் சோழா சுற்றுலா பயணமாக இந்தியாவெங்கும் பயணித்து படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரை தொடர்ந்து படக்குழுவினர் சென்னையில் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வினில் இயக்குநர் மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபியா துலிபாலா முதலானோர்…

Read More