ஹாட் ஸ்பாட் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஹாட்ஸ்பாட் கதை

கதையின் ஆரம்பதில் ஒரு இயக்குனர் ஒரு தயாரிப்பாளரிடம் சென்று 4 கதைகளை சொல்கிறார், அந்த நான்கு கதையை பற்றி பார்ப்போம்.

முதல் கதையில் கதையின் நாயகன் விஜய் மற்றும் கதையின் நாயகி தன்யா இருவரும் காதலித்து இருவரின் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்குகின்றனர், ஆனால் திருமணத்திற்கு அவசரப்பட்ட தன்யா தற்போது திருமணம் செய்துகொள்ள தயங்குகிறார், இதற்கான காரணம் என்ன என்பதே இந்த கதையின் மீதி கதை…

Read Also: Aadujeevitham- The GoatLife Tamil Movie Review

இரண்டாம் கதையில் கதையின் நாயகன் சித்தார்த் மற்றும் கதையின் நாயகி தீப்தி இருவரும் காதலிக்கின்றனர். இவர்களின் இருவரின் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்குகின்றனர். ஆனால் இவர்களின் திருமணத்திற்கு ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை என்ன என்பதும், அதற்கடுத்து நடந்தது என்ன என்பதே, இந்த கதையின் மீதி கதை…

மூன்றாம் கதையில் கதையின் நாயகன் வெற்றி மற்றும் கதையின் நாயகி அனிதா இருவரும் காதலிக்கின்றனர், வெற்றிக்கு வேலை போனதால் EMI கட்டுவதற்கு கஷ்டப்படுகிறார், அப்போது பணத்தேவையின் காரணமாக இவர் Male Sex Worker ஆக மாறுகிறார். இதனால் இதற்கடுத்து இவர் வாழ்வில் நடந்தது என்னென்ன என்பதே, இந்த கதையின் மீதி கதை…

நான்காம் கதையில் கதையின் நாயகன் ஏழுமலை மற்றும் கதையின் நாயகி லக்ஷ்மி இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர், இவர்களுக்கு ஃபேமஸ் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக தனியார் நிகழ்ச்சில் கலந்துகொள்கின்றனர், திடீரென்று அந்த பெண் பிள்ளையை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். இதற்கடுத்து அந்த பெண் பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதே கதையின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் சற்று வித்யாசமான முறையில் இயக்கியுள்ளார்.

படத்தில் சிறப்பானவை

➡வித்யாசமான கதைக்கரு
➡அனைவரின் எதார்த்த நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡சில எதார்த்த காமெடிகள்

படத்தில் கடுப்பானவை

➡மெல்ல நகரும் கடைசி கதைக்களம்

Rating: ( 3/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஆடுஜீவிதம்- தி கோட் லைஃப் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைஇடி மின்னல் காதல் தமிழ் திரைப்பட விமர்சனம்