பெத்தி தமிழ் திரைப்பட விமர்சனம்

பெத்தி (2026) – முன்னோட்டம்

ராம்சரண், ஷிவா ராஜ்குமார், ஜான்வி கபூர் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

பெத்தி கதை

விஜயநகரம் எனும் ஊரை தாண்டி மலை கிராமத்தில் எந்தவொரு அடையாளமும் இல்லாமல் சுமர் 1800க்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அந்த மலையை தாண்டி ரயில் சென்றாலும் அந்த ஊரில் அது நிற்காத நிலையில், ஒத்தையடி பாதையில் பல கிலோ மீட்டர் நடந்தே மக்கள் வேலைக்குச் செல்லும் சூழல் நிலவுகிறது. கூலி கொடுத்தால் யாருக்காகவும் ஆடக்கூடிய ஆட்டக் கூலியாக அறிமுகமாகிறார் பெத்தி (ராம் சரண்).

கிரிக்கெட் ஆட்டத்தில் அசைக்க முடியாத நபராக விளங்கினாலும் சாதிய பிரச்னை அவரது அடையாளத்தை அசிங்கப்படுத்த அங்கிருந்து குஸ்தி சொல்லித் தரும் சிவராஜ்குமாரிடம் அவரை வரவழைக்கிறது. அதற்கு காரணமாக அப்பளசூரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெகபதி பாபுவிற்கு நேரும் சம்பவமும் வழிகாட்டுகிறது. எப்படியாவது குஸ்தியில் தேசிய சாம்பியனாக மாறி தனது ஊருக்கு அடையாளத்தை பெற்றுத் தர போராடும் பெத்திக்கு கிளைமேக்ஸ் நெருக்கத்தில் என்ன நடக்கிறது. இனிமேல் விளையாடவே முடியாத சூழல் உருவாக அதன் பின்னர் அவர் சாதித்தாரா? இல்லையா? என்பது தான் பெத்தி படத்தின் கதை.

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡ராம்சரண்- ன் அட்டகாசமான நடிப்பு
➡சண்டைக்காட்சிகள்
➡ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் மற்றும் பின்னணி இசை
➡ஒளிப்பதிவு
➡படத்தொகுப்பு
➡சிறப்பான இறுதி காட்சி

படத்தில் கடுப்பானவை

➡படத்தின் நீளம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

ரேட்டிங்: ( 2.75 / 5 )

 

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபிரபல சினிமா பட தயாரிப்பாளரும் நடிகர் ஜீவா & ஜித்தன் இவர்களின் தந்தையுமான திரு RB சௌத்திரி சாலை விபத்தில் மரணமடைந்தார்.
அடுத்த கட்டுரைபரிமளா & கோ தமிழ் திரைப்பட விமர்சனம்