ஏன் என்னை ஏதோ செய்தாய் தமிழ் திரைப்பட விமர்சனம்

ஏன் என்னை ஏதோ செய்தாய் (2026) – முன்னோட்டம்

டி. அந்தோணி எழுதி, இயக்கி, நாயகனாக நடித்து வெளியான ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ (Yen Ennai Edho Seidhai) திரைப்படத்தின் விமர்சனம்

ஏன் என்னை ஏதோ செய்தாய் கதை

கார்த்திக் (D. அந்தோணி) தாயின் பிரிவாலும் தனிமையினாலும் ஆழமான மன உளைச்சலுக்கு ஆளாகி, மது மற்றும் புகைப் பழக்கத்திற்கு அடிமையான ஒரு இளைஞன். வாழ்க்கையில் பெரிய லட்சியங்கள் எதுவுமின்றி வாழும் அவன் வாழ்வில் ‘மது’ (மதுமிதா தாஸ்) என்ற பெண் நுழைகிறாள்.

இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து லிவிங்-டு கெதர் (Living together) முறையில் வாழத் தொடங்குகின்றனர். மதுவின் வரவு கார்த்திக்கின் வாழ்வில் ஒரு புது வெளிச்சத்தைக் கொண்டுவருகிறது. ஆனால், கார்த்திக்கின் எல்லை மீறிய குடிப் பழக்கமும், கோபத்தில் அவன் விடும் வார்த்தைகளும் அந்த உறவில் விரிசலை ஏற்படுத்துகின்றன. உணர்வுப் போராட்டங்களுக்கும், தனிமைக்கும் இடையே சிக்கித் தவிக்கும் கார்த்திக்கின் வாழ்க்கை என்னவாகிறது என்பதே படத்தின் கதை.

காதலையும், அதனுடன் பிணைந்துள்ள வலியையும் எதார்த்தமான முறையில் ரசிக்க விரும்புபவர்களுக்கு ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ ஒரு நல்ல, அழுத்தமான காதல் காவியம்!

Read Also: I’m Game Movie Review

படத்தில் சிறப்பானவை

➡இயல்பு மீறாத கதைக்களம்
டி. அந்தோணி மற்றும் மதுமிதா தாஸின் நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡பியட்ரோ வில்லானியின் (Pietro Villani) ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு கவிதையைப் போன்ற உணர்வைத் தருகிறது.
ஜெய்கர்-அஷோக் ஸ்ரீதரனின் பாடல்களும், ஜோ ரேடாவின் பின்னணி இசையும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு வலு சேர்க்கின்றன.

படத்தில் கடுப்பானவை

➡நீளமான இரண்டாம் பாதி
➡அதிகப்படியான வசனங்கள்

ரேட்டிங்: ( 2.75 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைஐ அம் கேம் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைவிமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!