சர்தார் 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

சர்தார் 2 (2026) – முன்னோட்டம்

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து 2022-இல் வெற்றி பெற்ற ‘சர்தார்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. இம்முறை உளவாளி உலகத்திற்குள் ‘Colistin’ எனும் ஆன்டிபயோடிக் (Antibiotic Apocalypse) ஆபத்தையும், பயோ-வார் (Bio-war) சதியையும் பின்னணியாகக் கொண்டு கதையை நகர்த்தியுள்ளார் இயக்குநர்.

சர்தார் 2 கதை

ரோ (RAW) முகவரான விஜய பிரகாஷ் (கார்த்தி), ‘வால்ரஸ்’ என்ற ஏஜென்ட்டைத் தேடும் முயற்சியில் களமிறங்குகிறார். மறுபுறம், நாட்டில் பெரும் பயோ-வார் பேரழிவை ஏற்படுத்தத் துடிக்கும் ‘பிளாக் டேகர்’ யோகி (எஸ்.ஜே. சூர்யா) மற்றும் அவரது கூட்டமும் அந்த ரகசியக் குறியீடுகளைத் தேடுகிறது.

கடந்த காலத்தில் சர்தாரால் தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய ஆபத்து, மீண்டும் உருவெடுக்கிறது. தனது தந்தை சர்தாருடன் இணைந்து விஜய பிரகாஷ் இந்த ஆன்டிபயோடிக் பேரழிவைத் தடுத்து நிறுத்தி நாட்டை எப்படி காப்பாற்றுகிறார்? என்பதே ‘சர்தார் 2’ கதையின் மையம்.

 

முதல் பாதியில் விறுவிறுப்பான ஆக்‌ஷன் அம்சங்களுடன் தொடங்கி, இரண்டாம் பாதியில் சற்று நீளமாக நகர்ந்தாலும், ஒரு நல்ல சமூகக் கருத்துடன் கூடிய ஸ்பை த்ரில்லராக ‘சர்தார் 2’ உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் மற்றும் ஸ்பை படங்களை விரும்புபவர்கள் ஒருமுறை பார்க்கலாம்!

Read Also: Mandaadi Movie Review

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡கார்த்தி மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் அட்டகாசமான நடிப்பு
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡டெக்னிக்கல் தரம்
சாம் சி.எஸ்-இன் பின்னணி இசை ஸ்பை த்ரில்லர் உணர்வைக் கூட்டுகிறது.

படத்தில் கடுப்பானவை

➡நீளமான திரைக்கதை
➡எமோஷனல் கனெக்ட் குறைவு

ரேட்டிங்: ( 2.75 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைமண்டாடி தமிழ் திரைப்பட விமர்சனம்