தி டார்க் ஹெவன் தமிழ் திரைப்பட விமர்சனம்

தி டார்க் ஹெவன் (2026) – முன்னோட்டம்

இயக்குநர் எஸ். பாலாஜி இயக்கத்தில், சின்னத்திரை பிரபலமாக இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள சித்து (Siddhu Sid), தர்ஷிகா, ரித்விகா, நிழல்கள் ரவி, வேலா ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள மிஸ்டரி க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ (The Dark Heaven).

தி டார்க் ஹெவன் கதை

மலை கிராமமான மெக்கரையை பின்னணியாகக் கொண்டு கதை தொடங்குகிறது. அங்குள்ள ஒரு பழமையான புத்தகத்தில், அதை வாசிப்பவர்களின் எதிர்காலச் சம்பவங்களும் அவர்களின் மரணம் எப்பொழுது, யாரால் நிகழும் என்ற விவரமும் முன்கூட்டியே எழுதப்பட்டிருக்கிறது.

கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர் மரணங்கள் நிகழ்கின்றன. இது வனதேவதையின் சாபம் என்று கிராம மக்கள் நம்புகின்றனர். இந்த நிலையில், காவல் அதிகாரியாக வரும் சித்து, இது சாபமா அல்லது ஒரு சைக்கோ கில்லரின் திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்குகிறார். இந்த மர்மப் புத்தகம், சாபம் மற்றும் தொடர் கொலைகளுக்கு இடையே உள்ள தொடர்பு என்ன என்பதை நோக்கி திரைக்கதை நகர்கிறது.

பல்வேறு சஸ்பென்ஸ் கூறுகள், திகில் சூழல் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட க்ரைம் திரில்லர் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு ‘தி டார்க் ஹெவன்’ ஒரு நல்ல திரையரங்க அனுபவத்தைத் தரும்.

Read Also: Enna Vilai Movie Review

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡சித்துவின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது.
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡விறுவிறுப்பான முதல் பாதி மற்றும் எதிர்பாராத கிளைமாக்ஸ்
➡பின்னணி இசை & ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பானவை

➡இரண்டாம் பாதியில் குழப்பம்
➡வேகம் குறையும் காட்சிகள்

ரேட்டிங்: ( 3 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைResident Evil: இந்தியாவில் வெளியாகும் தேதி, நடிகர்கள், கதைக்களம், டிரெய்லர்கள் மற்றும் பல தகவல்கள்
அடுத்த கட்டுரைபாரிஸ் கஃபே தமிழ் திரைப்பட விமர்சனம்