கோல்ட் கால் தமிழ் திரைப்பட விமர்சனம்

கோல்ட் கால் (2026) – முன்னோட்டம்

தம்பிதுரை இயக்கத்தில், சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், அமிதா ரங்கநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள மிஸ்டரி த்ரில்லர் திரைப்படம் ‘கோல்ட் கால்’ (Cold Call).

கோல்ட் கால் கதை

பெங்களூரு பின்னணியில் அமைக்கப்பட்ட இக்கதை, 2023 பனிக்காலத்தில் நடப்பதாகத் தொடங்குகிறது. ஒரு பிரபல தொழிலதிபரின் 13 வயது மகன் கடத்தப்படுகிறான். இந்த கடத்தல் வழக்கை விசாரிக்கும் போது, சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தில் (Market research) பணிபுரியும் 4 இளைஞர்கள் சந்தேக நபர்களாகச் சிக்குகின்றனர்.

இது வெறும் சாதாரணக் கடத்தலா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் பெரிய சதி உள்ளதா? உண்மைக்கும், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் நம்பும் கதைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி என்ன என்பதை கடந்தகால மற்றும் நிகழ்காலக் காட்சிகளுடன் சுவாரஸ்யமாகச் சொல்வதே ‘கோல்ட் கால்’ படத்தின் கதை.

சஸ்பென்ஸ் த்ரில்லர் மற்றும் மிஸ்டரி படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ‘கோல்ட் கால்’ ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தைக் கொடுக்கும்.

Read Also: Paris Cafe Movie Review

படத்தில் சிறப்பானவை

➡கதைக்கரு
➡நான்கு இளைஞர்களாக நடித்த புதுமுகங்களின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது
➡மற்ற அனைவரின் நடிப்பு
➡சமூகக் கருத்து
➡பின்னணி இசை

படத்தில் கடுப்பானவை

➡மெதுவான ஆரம்பம்
➡மேலும் மெருகேற்றப்படாத திரைக்கதை

ரேட்டிங்: ( 2.75 / 5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைபாரிஸ் கஃபே தமிழ் திரைப்பட விமர்சனம்