பிக்பாஸ் ராஜு ஜெயமோகனின் இயக்கி, நடிக்கும் டார்க் ஹியூமர் கதையான ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது!

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது. பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளரும் நடிகருமான ராஜு ஜெயமோகன் இப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார். சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது படக்குழு தென்காசியின் அழகிய இயற்கைச் சூழலில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மொட்டை மற்றும் இடிந்த கரை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படம் டார்க் ஹியூமர் ஜானரை சேர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமான அரங்குகள் மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட செட்டில் நடைபெறாமல் கதையின் உண்மைத்தன்மையை வலுப்படுத்தும் வகையில் மலை, காடுகள் என இயற்கைச் சூழலில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த உள்ளூர் மக்களையும் படத்தில் நடிக்க வைத்து, கதைக்கு கூடுதல் இயல்புத்தன்மையைச் சேர்த்து வருகிறது படக்குழு.

இது குறித்து இயக்குநரும் நடிகருமான ராஜு ஜெயமோகன் பகிர்ந்து கொண்டதாவது, “‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தில் இயற்கையை முக்கியமான ஒரு பகுதியாகக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினோம். செட்டிற்குள் படப்பிடிப்பு நடத்துவதற்கு பதிலாக, ரியல் லொகேஷனில் படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். இதனால் மழை, காடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் இவை அனைத்தும் கதையின் ஒரு பகுதியாக உள்ளன. நாங்கள் படப்பிடிப்பிற்காக எந்தப் பகுதிக்குச் சென்றாலும், அந்தந்த இடங்களைச் சேர்ந்த மக்களையும் படத்தில் நடிக்க வைக்கிறோம். தற்போது தென்காசியில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது அனைத்து வயதினரையும் கவரும் டார்க் ஹியூமர் திரைப்படம். எங்கள் தயாரிப்பாளர்களான சுதன் சுந்தரம் சார் மற்றும் ஹெச். வினோத் சார் இருவரின் ஆதரவால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்து வருவது மகிழ்ச்சி” என்றார்.

’ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தில் திறமையான நடிகர்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். துஷாரா விஜயன், தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேபோல், சத்யராஜ் இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யராஜ் இதுவரை நடித்துள்ள 250-க்கும் மேற்பட்ட வித்தியாசமான தோற்றங்களுக்குப் பிறகும், இப்படத்திற்காக இதுவரை பார்த்திராத புதிய, சவாலான தோற்றத்தை ஏற்று நடித்துள்ளார்.

இயக்குநர்கள் பாக்யராஜ் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜு ஜெயமோகன், ’ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அதேசமயம், இப்படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் சார்பில் ஹெச். வினோத் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

ஒளிப்பதிவு: டி.எஸ். பிரசன்னா,
படத்தொகுப்பு: கோவிந்த்,
கலை இயக்கம்: பாலா ஜெயப்ரதா,
இசை: ஃபாக்ஸ்ன்,
சண்டைக்காட்சிகள்: விக்கி,
ஆடை வடிவமைப்பு: ரம்யா சேகர்,
விஎஃப்எக்ஸ்: நாக் ஸ்டூடியோஸ்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைதேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!
அடுத்த கட்டுரைநடிகர்கள் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் இணைந்த ‘காக்க காக்க’, ‘நான் அவனில்லை’ படங்கள் புகழ் ஜீவன்!