மஹாவீர் கர்ணன் ஆக ராகவா லாரன்ஸ் நடிக்க, ரமேஷ் வர்மா இயக்கத்தில் ஐந்து மொழிகளில் உருவாக இருக்கிறது ‘மஹாவீர் கர்ணா’

பென் மூவீஸ் (PEN MOVIES ) ஜெயந்திலால் கடா வழங்க (JAYANTILAL GADA PRESENTS), ஆர்வி ஸ்டூடியோஸ் – ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ்  (RV STUDIOS & SRI NEELADRI PRODUCTIONS) இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. கர்ணனின் காவியத்தை இந்தியத் திரைகளில் உயிர்ப்பெறச் செய்ய வருகிறது ‘மஹாவீர் கர்ணா’.

மகாபாரத இதிகாச நாயகர்களில் ஒருவரான மஹாவீர் கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க ரமேஷ் வர்மா (RAMESH VARMA) பிரம்மாண்ட திரை அனுபவத்தை காட்சிப்படுத்த இருக்கிறார். ரூ.150 கோடி பொருட் செலவில் தயாராகவுள்ள இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்தில் ஒரே நேரத்தில் படமாக்குகின்றனர்.

இத்திரைப்படத்துக்காக பிரம்மாண்டமான சிறப்பு அரங்குகள், புராண காலத்தை கண்முன் நிறுத்தும் கலை வடிவமைப்புகள், அசர வைக்கும் போர்க்காட்சிகள் மற்றும் உலகத்தர VFX தொழில்நுட்பம் என அனைத்தும் சேர்ந்து, மொத்தத்தில் ஒரு பிரமிக்க வைக்கும் காட்சி விருந்தாக இப்படம் உருவாக்கப்பட இருக்கிறது.

கௌரவம், விசுவாசம், தியாகம் தான் கர்ணனின் விதியை நிர்ணயித்தன. அந்த மாவீரனின் கதையை உணர்வுபூர்வமாகவும், பிரம்மாண்டமாகவும் சொல்லவிருக்கிறார் இயக்குநர் ரமேஷ் வர்மா. படத்தின் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன.

‘மஹாவீர் கர்ணா’ மூலம் கர்ணனின் உலகம் உங்கள் கண் முன்னால் விரியவிருக்கிறது. மஹாவீர் கர்ணனாக ராகவா லாரன்ஸ் அதை செய்துகாட்டுவார்.

மஹாவீர் கர்ணன், உச்சம் தொடப் பிறந்த வீரன்…அவரது காவியம் நீக்கமற வாழும் புராணம்…

அவர் புகழைத் தாங்கிவரும் ‘மஹாவீர் கர்ணா’ உலகெங்கும் 2027-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடத்தில் வெளியாகும்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரை‘ராக்கா’ திரைப்படம் கின்னஸ் உலக சாதனை படைத்தது!