தேஜாவு தமிழ் திரைப்பட விமர்சனம்

தேஜாவு கதை

ஒரு எழுத்தாளரை சிலர் போன் செய்து மிரட்டுகிறார்கள் இதனை போலீசிடம் புகார் கொடுக்க அவர் செல்கிறார், அவர் புகார் கொடுத்த மறுநாள் போலீஸ் இந்த எழுத்தாளரை கைது செய்து விடுகின்றனர் காரணம் இதற்கு முன்பு பூஜா என்ற பெண் காணாமல் போய் இருப்பார் அவர் இந்த எழுத்தாளரின் பெயரை தான் கடைசியாக கூறி இருப்பர்…

இது ஒருபுறம் இருக்க இந்த எழுத்தாளர் எழுதும் அனைத்தும் நிஜமாகவே நடக்கின்றன அப்படிதான் இந்த பூஜாவையும் பற்றி இவர் எழுதியிருப்பார் இந்த பூஜா உயர் காவல் அதிகாரியின் மகள் என்பது தெரியவருகிறது பிறகு இந்த கேஸை விசாரிக்க கதாநாயகன் விக்ரம் குமார் வருகிறார்… இந்த விக்ரம் குமார் தான் வருவார் என்பதும் அந்த எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார் இந்த எழுத்தாளர் எழுதுவது அனைத்தும் உண்மையா ? இல்லையா ? என்பதும் விக்ரம் குமார் பூஜாவை கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பது தான் மீதி கதை இதனை மிக சுவாரசியமாக கையாண்டுள்ளார் இயக்குனர் அரவிந்த் சீனிவாசன்

படத்தில் சிறப்பானவை
திரைக்கதை
அருள்நிதி மற்றும் அனைவரின் நடிப்பு
ஜிப்ரானின் பின்னணி இசை
முத்தையாவின் ஒளிப்பதிவு

படத்தில் கடுப்பனவை
இரண்டாம் பாதி கணிக்கும் படியான கதைக்களம்
சில இடங்களில் டப்பிங் சொதப்பல்

Rating : ( 3.5/5 )

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.
முந்தைய கட்டுரைதி கிரே மேன் தமிழ் திரைப்பட விமர்சனம்
அடுத்த கட்டுரைமீம் பாய்ஸ் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்