இசைஞானி இளையராஜாவின் ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ஆங்கிலத்திரைப்படம்

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது.

’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா மற்றும் மேட்டில்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பல முக்கியமான திரைக்கலைஞர்களும், தொழிற்நுட்ப வல்லுநர்களும் இப்படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள்.

இப்படத்திற்கான இசைஞானி இளையராஜாவின் பங்கு, படத்தின் பிம்பத்தை பெரிய அளவில் உயர்த்துகிறது. உலகெங்கிலும் பலகோடி ரசிகர்களைக் கொண்ட ஒரு இசைமேதை இப்படத்திற்காக தனது சிறந்த இசையை வழங்கியுள்ளது பெருமைக்குரியதாகும். இசைஞானி வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு திகில் படத்திற்குள் தன்னை இணைத்துக் கொள்ளும் திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கான பின்னணி இசை, அவரின் பரந்த இசை ஞானத்திலிருந்து மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்காக BOW TIE Symphony Orchestra -ல் மாயாஜாலமான அசல் ஒலிப்பதிவுகளை இளையராஜா உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் கூட இளையராஜா அளித்திருந்த ஒரு நேர்காணலில் கூட, “எ பியூட்டிஃபுல் பிரேக் அப் திரைப்படத்தையும், அதன் இயக்குநரையும் வெகுவாக பாராட்டி பேசியிருந்தார்.

“இசைஞானியின் இசை தொடரியல், முற்றிலும் தனித்துவமானதாக இருப்பதால், மேற்கத்திய பார்வையாளர்கள் அதனை மொத்தமாக கொண்டாடுகிறார்கள். எனவே, இசைஞானியின் PR டீம், இந்தப் படத்தின் இசையை சாதாரணமாக விளம்பரப்படுத்தாமல், ஆஸ்கார் கிராமி, கோல்டன் குளோப் போன்ற பிற பொருத்தமான, தகுதியான மன்றங்களில் போட்டிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்மூலம், 12வது தாதாசாஹேப் பால்கே திரைப்பட விழா விருதுகளில் சிறந்த பின்னணி இசையை வென்றது மட்டுமல்லாமல், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX) பிரிவில் ஸ்ரீகாந்த் கண்டாலாவுக்கு சிறந்த படத்திற்கான விருதையும் A Beautiful Breakup பெற்றது. மேலும் சில சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்குபெற்று, சிறந்த படமாக தேர்வாகியுள்ளது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *