அவள் அப்படித்தான் 2 தமிழ் திரைப்பட விமர்சனம்

‘அவள் அப்படித்தான் 2’ கதை

திரைப்படக் கல்லூரி மாணவர் ருத்ரய்யா இயக்கிய ‘அவள் அப்படித்தான் ‘ படம் 1978-ல் வெளியானது. பெண் என்பவள் யாருடைய எதிர்பார்ப்புக்கும் உருவக வடிவமைப்புக்கும் உட்படாதவள் என்கிற சுதந்திர சிந்தனையை விதைத்தது அந்தப் படம் .அதே சிந்தனையின் தொடர்ச்சியாக 2023-ல் வந்திருக்கும் படம் தான் அவள் அப்படித்தான் 2.

Read Also: Kolai Movie Review

கதையின் நாயகி மஞ்சு ஒரு தனியார் பள்ளி ஆசிரியை.அறிவும் துணிவும் மனிதனுக்கு அழகு என்று வளர்க்கப்பட்டவள். பிறருக்கு உதவுவது, தவறுகளைத் தட்டிக் கேட்பது, சுதந்திரமான சிந்தனையோடு இயங்குவது என்று இருப்பவள்.அவளது கணவன் ராம் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறான்.அவனிடம் பலரும் வேலை பார்க்கிறார்கள்.அவர்களுக்குப் பள்ளி செல்லும் ஒரு மகள் இருக்கிறார்.

ஒரு நாள் சனிக்கிழமை காலை பள்ளி வேலைக்குச் சென்ற மஞ்சு இரவு 10 மணி வரை வீடு வந்து சேரவில்லை.கதாநாயகன் ,அவனது அம்மா, உடன் இருக்கும் அத்தை, குழந்தை என அனைவரும் பதற்றம் அடைகிறார்கள். தன் நண்பனுடன் இணைந்து கொண்டு வெளியே தேடுகிறான் நாயகன். ஞாயிற்றுக்கிழமை காலை பொழுது விடிந்து மஞ்சு வீடு வந்து சேர்கிறாள். “ராத்திரி எங்கே போயிருந்தாய்?” என்று அவள் கணவன் கோபமாகக் கேட்க, அவளோ “ராத்திரி நான் எங்கே போயிருந்தேன்னு தெரியணுமா? இல்ல என்ன நடந்துச்சுன்னு தெரியணுமா?” என்கிறாள். இப்படி நேரடியான பதிலை மட்டும் சொல்லாமல் ஏதேதோ பேசுகிறாள், தன் மனம் நினைத்தபடி ஏதேதோ செய்கிறாள். என்ன நெஞ்சழுத்தமென்று அவனது ஈகோ தலைதூக்கி நிமிர, எதற்குச் சொல்ல வேண்டும் என்று அவளது மனம் திமிறிக் கேள்வி கேட்க, மோதல் வெடிக்கிறது. கடைசியில் இவர்களுக்குள் என்னதான் நடந்தது என்பதே படத்தின் மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் இரா.மு. சிதம்பரம் எழுதி இயக்கியுள்ளார்.

YouTube Subscribe to our Youtube Channel Thamizh Padam for the latest Kollywood updates.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here