அவள் பெயர் ரஜ்னி கதை
சென்னையிலிருந்து கேரளாவிற்கு தன் மனைவி கௌரியுடன் செல்கிறார் அபிஜித், செல்லும் வழியில் கார் பெட்ரோல் இல்லாமல் நிற்கிறது, அருகிலுள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்க செல்கிறார் அபிஜித், மனைவி கௌரி காரில் இருக்கிறார், கணவர் சென்ற சில நிமிடங்களில் கார் மேல் யாரையோ கொலை செய்வதுபோல் இருக்க, அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கௌரி அங்கிருந்து தப்பித்துவிடுகிறார், செல்லும்போது பார்த்தால் கார்மேல் கொலை செய்யப்படுவதே தன் கணவர்தான் என்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகிறார் கௌரி.
Read Also: Conjuring Kannappan Tamil Movie Review
கதையின் நாயகன் நவீன் ( காளிதாஸ் ) தான் கௌரியின் தம்பி, தன் அக்காவிற்கு இப்படி நடந்ததை இவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, போலீசுடன் சேர்ந்து இவரும் கொலையாளியை கண்டுபிடிக்க தொடங்குகிறார். போலீஸ் விசாரணையில் கொலை செய்தது பேய் என்று சிலரும், பெண், என்று சிலரும் கூறுகின்றனர், விசாரணையில் போக போக சில திடுக்கிடும் விஷயங்கள் கிடைக்கின்றன, கடைசியில் இந்த கொலையை செய்தது யார் என்பதையும், கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை…
இந்த கதையினை இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கிஸ் இயக்கியுள்ளார்.
படத்தில் சிறப்பானவை
➡கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
➡ஒளிப்பதிவு
➡பின்னணி இசை
➡சிறப்பான முதல்பாதி
➡ ஒருசில எதார்த்த காமெடிகள்
படத்தில் கடுப்பானவை
➡கணிக்கும்படியான ஒருசில காட்சிகள்
➡மெல்ல நகரும் இரண்டாம் பாதி கதைக்களம்
➡காலகாலமாக கண்ட கதைக்களம்
Rating: ( 2.75/5 )


























